Ajith-Rajini: அஜித் இப்போது ஞானி மாதிரி ஆகிவிட்டார். கடந்த சில வருடங்களாகவே அவர் தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார். எந்த பொது நிகழ்விலும் அவரை பார்க்க முடியாது.
கடந்த ஒரு வருடமாக அது கொஞ்சம் மாறி இருக்கிறது. குடும்பத்துடன் அவர் வெளியில் வரும் புகைப்படங்கள் வீடியோக்கள் அடிக்கடி ரிலீஸ் ஆகிறது. அதேபோல் கிரிக்கெட் மேட்ச் பார்க்க வந்த வீடியோவும் வைரலானது.
அவருடைய இந்த மாற்றம் ஆச்சரியம்தான். ஆனால் சினிமா ப்ரமோஷன் பொருத்தவரையில் அதே கொள்கையோடு தான் இருக்கிறார். இதற்கு ரஜினி தான் காரணம் என்பது அதிர்ச்சியாக தான் உள்ளது.
ஏனென்றால் ஆரம்பகால கட்டத்தில் அதாவது அஜித் வளர்ந்து வந்த போது அதிகமாக பேசிக்கொண்டே இருப்பார். அதிலும் 10 வார்த்தை பேசினால் 9 வார்த்தை விஜய் பற்றியதாகத்தான் இருக்கும்.
ரஜினியின் போதனையால் மாறிய AK
எப்ப பார்த்தாலும் அவரை திட்டி பேசிக் கொண்டே இருப்பார் என பல பத்திரிக்கையாளர்கள் கூறியதுண்டு. இதுதான் அவர் மீது நெகட்டிவ்வான விஷயங்கள் பரவுவதற்கு முக்கிய காரணம்.
அஜித்தை பேட்டி எடுக்க சென்றால் கூட விஜய் பற்றி பேசி மொக்கை போடுவார் என பத்திரிக்கையாளர்கள் பின்வாங்கிய கதையும் இருக்கிறது. அப்படிப்பட்டவர் திடீரென மீடியாவை விட்டு ஒதுங்கி விட்டார் என்றால் அதற்கு காரணம் ரஜினி தான்.
மீடியாக்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். சொல்லாததை கூட சொல்லியதாக செய்தி போட்டு விடுவார்கள் என சில பல அட்வைஸ் கொடுத்திருக்கிறார். அதன் காரணமாகவே அஜித் மீடியாவை தள்ளி நிறுத்திவிட்டார்.
ஒருவகையில் இது பத்திரிக்கையாளர்களுக்கு கோவம் தான். அதுவும் சூப்பர் ஸ்டார் இப்படி செய்து விட்டாரே என்ற வருத்தம் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் யோசித்துப் பார்த்தால் அஜித் மீது இருக்கும் அன்பின் காரணமாகத்தான் ரஜினி இதை சொல்லி இருக்கிறார்.
சமீபத்தில் நடந்த கூலி விழாவில் அஜித் பற்றி சூப்பர் ஸ்டார் பேசியது கூட இந்த அன்பின் காரணமாக தான். இப்படியாக இருவருக்கும் இடையே ஒரு நல்ல உறவு இருக்கிறது.