ethirneechal 2: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், ஈஸ்வரி கழுத்தை நெறித்து அடித்து துன்புறுத்தியது குணசேகரன் தான் என்று வீடியோ ஆதாரத்தின் மூலம் அறிவுக்கரசிக்கு மட்டுமே தற்போது தெரிந்து இருக்கிறது. ஆனால் சந்தேகத்தின் படி குணசேகரன் மீது கோபத்துடன் இருக்கும் ஜனனிக்கு எந்தவித ஆதாரமும் கிடைக்கவில்லை.
இருந்தாலும் குணசேகரன் தான் இதற்கு எல்லாம் காரணம் என்று சட்டபூர்வமாக ஆக்ஷன் எடுக்க வேண்டும் என்று ஜனனி, நந்தினி ரேணுகாவை கூட்டிட்டு கிளம்புகிறார். போகும்பொழுது அறிவு வழி மறைத்து தேவையில்லாமல் பேசி ஜனனியின் கோபத்தை காட்டும் விதமாக அருவாளை தூக்கி குணசேகரன் கும்பலுக்கு எச்சரிக்கை கொடுத்துவிட்டார்.
இதனால் இந்த ஜனனி இந்த குடும்பத்துக்கும் சக்திக்கும் தேவை இல்லை என்று முடிவு பண்ணிய குணசேகரன், சக்திக்கு வேறொரு கல்யாணத்தை பண்ணி வைத்து ஜனனியை முடித்து விட வேண்டும் என்று ஒரு பக்கம் பிளான் பண்ணிவிட்டார். இன்னொரு பக்கம் ஈஸ்வரியின் இந்த நிலைமைக்கு ஜனனி தான் காரணம் என்று கதையை திருப்பி குணசேகரன் ஏதோ ஒரு பிளான் போடுகிறார்.
ஆனால் என்ன நடந்தாலும் ஈஸ்வரி அக்காவின் நிலைமைக்கு ஒரு நியாயம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஜனனி போராடுகிறார். ஆனால் இந்த போராட்டத்தை ஜீவானந்தத்தின் மனைவி இறந்திருக்கும்போதே கையில் எடுத்திருந்தால் அடுத்தடுத்து வாத்தியார் தற்போது ஈஸ்வரிக்கு இந்த நிலைமை வந்திருக்காது. இப்பொழுது ஈஸ்வரிக்கு ஒரு நிலைமை என்றதும் மொத்த குடும்பமும் கொந்தளித்து போய் இருக்கிறது.
அதிலும் நியாயமாக நடந்து கொள்ளும் குற்றவை இந்த கேசில் தலையிடக்கூடாது என்று குணசேகரன் பண பலத்தை வைத்து குற்றவையை டம்மியாக்கிவிட்டார். ஆனால் அதற்கு பதிலாக வரப்போகும் வில்லன் ஜனனிக்கு ஆதரவாக இருக்கப் போகிறார். அந்த வில்லன் யார் என்றால் கோலங்கள் சீரியலில் ஆதி கேரக்டரில் நடித்த அஜய் தான். அந்த வகையில் எதிர்நீச்சலுக்கு விடிவுகாலம் பிறக்கிறதா குணசேகரன் வீட்டு பெண்களுக்கு நியாயம் கிடைக்குமா என்பதை பார்க்கலாம்.