Rajinikanth: சொந்த செலவில் சூனியம் வைப்பது போல் வாயை கொடுத்து மாட்டி இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை யூட்யூபில் வெளியானது.
ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதனாலேயே கூலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது என்ன பேசி இருப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகம் ஆகி இருந்தது.
தற்போது இவ்வளவு பெரிய நடிகர் ரஜினி இப்படியா பேசுவார் என்று ஒரு பக்கம் நெகட்டிவ் விமர்சனங்கள் கிளம்பி இருக்கிறது. அதாவது மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் நடித்த சௌபின் இந்த படத்தில் நடிக்க பேசப்பட்டு இருக்கிறார் என லோகேஷ் கனகராஜ் ரஜினியிடம் கூறியிருக்கிறார்.
கூலி இசை வெளியீட்டு விழா
இவரா, சொட்டை தலையுடன் ஆள் ஒரு மாதிரி இருக்கிறாரே இவர் எப்படி இந்த கேரக்டருக்கு செட் ஆவார் என்று நினைத்தேன் என ரஜினி சொல்லி இருக்கிறார். மேலும் ஸ்ருதி கிளாமராக நடிக்கும் கதாநாயகி இவரை இந்த கேரக்டரில் எப்படி லோகேஷ் தேர்வு செய்தார் என்று நினைத்ததாகவும் சொல்லியிருந்தார்.
இதற்கு ஒரு தரப்பினர் ரஜினி மட்டும் தலையில் முடி இல்லாமல் விக் வைத்து நடிக்கவில்லையா, இதற்கு முன்பு சௌபின் நடித்த படங்களை இவர் பார்த்திருக்கிறாரா இல்லையா, இவரை மாதிரி விக் மீது நம்பிக்கை வைத்து அவர் நடிப்பது கிடையாது என்று சொல்கிறார்கள்.
மேலும் தன்னுடைய நண்பர் மகளை கிளாமர் கேள் என்று சொல்கிறாரே இதெல்லாம் தவறான விஷயம் இல்லையா என்று பேசி இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் ரஜினி சௌபினை நான் அப்படி நினைத்தேன் ஆனால் அவர் நடிப்பில் பிச்சி உதறிவிட்டார்.
இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு கமல் பெயரை இவங்க காப்பாத்திடுவாங்க என்று மக்கள் கொண்டாடும் அளவிற்கு ஸ்ருதிஹாசன் நடிப்பு இருப்பதாகவும் தான் ரஜினி பேசி இருந்தார்.
இதையெல்லாம் விட்டுவிட்டு அவர் பேசிய முதல் பாதியை மட்டும் பெரிய அளவில் சர்ச்சையாக கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே திமுக விழாவில் துரைமுருகன் பற்றி பேசி அது ரஜினிக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டு பண்ணியது. தற்போது அவர் சொன்ன விஷயத்தை முழுமையாக எடுத்து சொல்லாமல் பாதியிலேயே கட் பண்ணி இப்படி நெகட்டிவிட்டி பரப்பப்படுகிறது.