Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலாவுக்கு வேலை கிடைத்து விட்டது என்பதால் அவரிடம் இருந்த பணத்தை வைத்து பல்லவன் பாண்டியன் சேரன் மற்றும் நடேசன் என அனைவருக்கும் புது டிரஸ் வாங்கிட்டு வந்து சர்ப்ரைஸாக கொடுக்கிறார். அப்பொழுது சோழன் நமக்கும் வாங்கிட்டு வந்து கொடுப்பார் என்று எதிர்பார்ப்புடன் இருந்தார்.
ஆனால் நிலா உங்களுக்கு நான் வாங்கிட்டு வரவில்லை என்று சொல்லியதும் சோழன் முகம் வாடிப் போய்விட்டது. ஆனால் அதெல்லாம் சோழனை சீண்டுவதற்காக தான் என்று நிலா சோழனுக்கு வாங்கிட்டு வந்த புது டிரெஸ்ஸை கொடுத்து சந்தோசப்படுத்தி விட்டார். அடுத்ததாக நிலா ஆபீஸ்க்கு முதல் முறையாக போவதால் சேரன் சர்க்கரை பொங்கல் வைத்து அனைவருக்கும் கொடுக்கிறார்.
அடுத்து கிளம்பி வெளியே போகும் பொழுது பல்லவன் நிலாவுக்கு சர்ப்ரைஸ் பண்ணும் விதமாக பட்டாசு போட்டு அசத்தி விட்டார். இந்த சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக நடேசன் ஊர் முழுக்க சொல்லும் பொழுது அவர் கையில் பட்டாசு பட்டு விட்டது. இதனால் நடேசன் கை காயமாகிவிட்டது. அடுத்து நிலாவை ஆபீசுக்கு கூட்டிட்டு போகும் சோழன் காரில் வைத்து நிலாவுக்கு ஒரு கிப்ட் கொடுக்கிறார்.
அந்த கிப்ட் பார்த்த நிலாவுக்கு ரொம்ப சந்தோசமாகிவிட்டது. எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது என்று சோழன் வாங்கிக் கொண்டு வந்த வாட்சியை கையில் கட்டி சந்தோஷமாகி விட்டார். இதனை தொடர்ந்து வேலையெல்லாம் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த நிலா யாருக்கும் தெரியாமல் நடேசன் இடம் பல்லவனின் அம்மா பற்றி கேள்வி கேட்கிறார்.
அதற்கு நடேசன் எதுவும் சொல்லாமல் கத்த ஆரம்பித்த நிலையில் நிலா மெதுவாக பேசுங்கள் மற்றவர்கள் காதில் விழப்போகுது என்று சொல்கிறார். அதற்கு நடேசன் எந்த உண்மையும் சொல்ல முடியாது என்று சொல்லிய பொழுது நிலா அவங்க சென்னையில் தான் இருக்கிறார்களா என்று கேட்கிறார். உடனே நடேசன் நான் தான் சொல்ல மாட்டேன் என்று சொல்கிறேன் மறுபடியும் மாட்டேன்னு சொல்கிறேன்.
மறுபடியும் ஏன் அதைப்பற்றியே கேட்கிறாய் என்று கோபப்படுகிறார். அதற்கு நிலா இன்றைக்கு நான் பல்லவனின் அம்மாவை நேரில் பார்த்தேன். அதனால் தான் உங்களிடம் அதைப் பற்றி கேட்கிறேன் இன்று நிலா நடேசன் இடம் சொல்கிறார். அந்த வகையில் நடேசன் இதுவரை மறைத்திருந்த உண்மை நிலா மூலம் வெளிவரப் போகிறது.