சமீப காலமாக இவர் பக்கம் வீசும் காற்று திசை மாறி செல்கிறது. அடுத்தடுத்து இயக்குனர்களையும், படங்களையும் கமிட் செய்த இவருக்கு இப்பொழுது எதுவும் கை கூடுவதில்லை . இவர் நடிப்பதாக இருந்த மூன்று படங்கள் நிலுவையில் இருக்கிறது.
தேசிங்கு பெரிய சாமி மற்றும் வெற்றிமாறனுடன் கூட்டணி போடவிருந்த படங்கள் எல்லாம் என்ன ஆனது என்று தெரியவில்லை. இதில் தேசிங்கு பெரியசாமி படம் அதிக பட்ஜெட் காரணமாக தயாரிப்பதற்கு யாரும் முன்வரவில்லை . வெற்றிமாறன் படமும் இப்பொழுது இல்லை என்று செய்திகள் வெளிவருகிறது.
ஏற்கனவே இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன், சிவகார்த்திகேயன் இணைய உள்ள படம், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக நின்று போனது. அதன் தயாரிப்பாளர் கோல்டுமைன் மனிஷ், சிபி சக்கரவர்த்தி இடம் சிம்புவை வைத்து படம் பண்ண சொல்லி இருக்கிறார்.
கதை கேட்ட சிம்பு நன்றாக இருக்கிறது என்றும் ஆனால் இரண்டாம் பாதியில் சில மாறுதல்கள் சொல்லி இருக்கிறார். அதில் திருப்தி அடையாத சிபி சக்கரவர்த்தி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் சிபியுடன் நடிக்கும் படமும் நின்று போனது. இப்படி இரண்டு இயக்குனர்கள் படம் சிம்புவிற்கு மிஸ் ஆனது
படைப்பாளிகளின் சுதந்திரத்தில் தலையிடுகிறார் என சிம்பு படத்தை மறுத்துவிட்டார் இயக்குனர் சிபி .இப்படி பல பேருடைய நம்பிக்கைக்குரிய நடிகராய் இருக்கிறார் எஸ் டி ஆர். ஆனால் சமீபத்தில் அவருக்கு எந்த படமும் ஹிட் ஆகவில்லை. ஆனால் இவருக்கு உண்டான டிமாண்ட் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதை பயன்படுத்த தவறிருக்கிறார்.