Rajini: ரஜினி படம் வந்தாலே சோசியல் மீடியா கலை கட்டி விடும். அப்படித்தான் இன்று கூலி வெளியாகி இருக்கிறது. படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வரும் நிலையில் ஒரு சில சம்பவங்களும் நடந்து வருகிறது.
அதாவது நேற்றிலிருந்து படம் நல்லா இல்லை என கமெண்ட்கள் பரவத் தொடங்கியது. அதை அடுத்து முதல் காட்சி ஓடிக் கொண்டிருக்கும் போதே நெகட்டிவ் விமர்சனங்கள் குவிய தொடங்கியது.
இதை யார் செய்கிறார்கள் என்பதை பெரிதாக யோசிக்க தேவையில்லை. ஏனென்றால் ரஜினி படம் வந்தால் விஜய் ரசிகர்கள் அதை குறை சொல்ல வந்து விடுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
அதனாலயே இரு தரப்புக்கும் இடையே எப்போதும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டே இருக்கும். அப்படித்தான் இன்றும் நடக்கிறது. ஆனால் அது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
வெறியோடு காத்திருக்கும் ரசிகாஸ்
சமீப நாட்களாக விஜய் ரசிகர்கள் அரசியல் ரீதியாக மற்ற கட்சியினரை தாக்கி பேசி வந்தனர். ஆனால் இன்று கூலி படம் வெளியானதும் அந்த வேலையை விட்டுவிட்டு மீண்டும் சினிமா சண்டையை ஆரம்பித்து விட்டனர்.
ஆனால் இது நிச்சயம் அடுத்த வருட தேர்தலில் எதிரொலிக்கும். அதே போல் தேர்தல் சமயத்தில் ரஜினியின் ஜெயிலர் 2 படம் வந்தால் எப்படி இருக்கும். தமிழக வெற்றி கழகத்தின் நிலைமை அவ்வளவுதான் என ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
போற போக்கை பார்த்தால் தேர்தல் வெறித்தனமா இருக்கும் என தெரிகிறது. ஏற்கனவே அஜித் ரசிகர்கள் இவர்கள் மீது கோபத்தில் இருக்கின்றனர். தற்போது ரஜினி ரசிகர்கள் தேர்தல் வரட்டும் என கொதிப்போடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.