ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் முந்தைய வெற்றித் திரைப்படமான “குட் பேட் அக்லி” பெரும் வசூலைப் பெற்றது. அஜித் அதில் ஒரு ‘One Man Show’ காட்டினார்.
இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் “AK 64” படம் மீண்டும் அப்டேட் ஆகி வருகிறது. குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் வரும் படத்தை ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.
AK64 படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 2025 இல் தொடங்கும் என்றும் படம் ஏப்ரல் அல்லது மே 2026 இல் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் கார் பந்தய சீசனுக்கிடையே படப்பிடிப்பில் நேரத்தை சமநிலைப்படுத்த திட்டமிட்டுள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் “குட் பேட் அக்லி” படத்தை ரசிகர்களுக்காக எடுத்ததாக கூறினார். ஆனால் AK64 அனைவரும் ரசிக்கத்தக்க வித்தியாசமான பொழுதுபோக்கு படமாக உருவாகும் என்று அவர் தெரிவித்தார். அஜித் நடிப்பு மற்றும் ஆதிக் இயக்கத்தின் கலவையால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் அஜித் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் “எனக்கு கதை எழுதாதே நான் உன் கதையில் இருக்க வேண்டும்” என்று அட்வைஸ் கூறியுள்ளார். இது அவரின் சினிமா மற்றும் கதாபாத்திரத்திற்கு முழு கவனம் செலுத்தும் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.
அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் ஒரு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.