Rajini : சமீபத்தில் கூலி படம் வெளியான நிலையில் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய வசூல் சாதனையும் படைத்து வருகிறது. இந்த சூழலில் சமீபத்தில் கூலி படத்தில் பிரபலங்கள் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி இருந்தது.
அதன்படி ரஜினிக்கு 200 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 50 கோடி, அனிருத்துக்கு 15 கோடி தரப்பட்டிருக்கிறது. வில்லனாக நடித்த நாகார்ஜுனாவுக்கு 10 கோடி, சத்யராஜுக்கு 5 கோடி, உபேந்திராவுக்கு 4 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் கிளைமாக்ஸ் காட்சியில் பாலிவுட் நடிகர் அமீர்கான் என்ட்ரி கொடுத்திருந்தார். ஆனால் அவரது கேரக்டர் கதையுடன் ஒட்டவில்லை என்ற விமர்சனங்கள் வருகிறது. ஆனால் அமீர்கானுக்கு 20 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
கூலி பட சம்பளம் குறித்து பேசிய அமீர்கான்
இதுகுறித்து இப்போது அமீர்கானே விளக்கம் கொடுத்திருக்கிறார். அதாவது தான் 20 கோடி சம்பளம் பெற்று வருவதாக வெளியான தகவலை முற்றிலும் மறுத்துள்ளார். அதாவது கூலி படத்திற்கு அமீர்கான் சம்பளமே வாங்க வில்லையாம்.
ரஜினி சார் மீது மிகுந்த மரியாதை மற்றும் அன்பு உள்ளதால் கூலி படத்தில் நடிக்க சம்மதித்தேன். மேலும் இந்த படத்தின் கதை மற்றும் சம்பளம் ஆகியவற்றை நான் கேட்கவே இல்லை. ரஜினி சார் படம் என்ற உடனே நடிக்க சம்மதித்து விட்டேன் என்று அமீர்கான் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் தமிழில் அமீர் கானின் அறிமுகப்படம் தான் கூலி. இவ்வாறு அவர் ரஜினிக்காக ஒரு ரூபாய் கூட வாங்காமல் நடித்துக் கொடுத்தது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ரஜினி என்ற மாஸ் நடிகருகாக பாலிவுட்டில் இவ்வளவு செல்வாக்கு உள்ள நடிகர் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.