சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்று சொல்லும் அளவிற்கு டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. அதனால் சன் டிவி சீரியல்களில் நடித்தால் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற முடியும். முக்கியமாக பிரைம் டைம் சீரியலில் நடித்தால் மக்களிடம் பிரபலமாகி விடுவார்கள்.
அப்படித்தான் மூன்று முடிச்சு சீரியல் மூலம் பிரபலமான நியாஸ் மற்றும் சுவாதிக்கு விருது கிடைத்திருக்கிறது. அதாவது மனம் ஒத்தும் தம்பதிகளாக வாழவும் இல்லை, பிடித்துப் போயும் கல்யாணம் பண்ணவில்லை, நிர்பந்தத்தால் கல்யாணம் பண்ண சூர்யா நந்தினி ஜோடி தான் சீரியல்களில் ட்ரெண்டிங் ஜோடி என்று சொல்லும் அளவிற்கு மக்களிடத்தில் பிரபலமாக இருக்கிறார்கள்.
அதனால் இவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக அதிக அளவில் பிரபலமான ஜோடி என்ற விருது சின்னத்திரை மூலம் இவருக்கு கிடைத்திருக்கிறது. சீரியல் ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள்ளேயே இவர்கள் பிரபலமாகி இருக்கிறார்கள்.
இவர்களைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் மூலம் அறிமுகமான சோழன் மற்றும் நிலா கதாபாத்திரமும் ட்ரெண்டிங் ஜோடி என்ற விருதுகளை பெற்றிருக்கிறார்கள். மதுமிதா அரவிந்துக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே சொல்லலாம். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் சீரியல் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.