Coolie : தற்போது வெளிவந்திருக்கும் கூலி படம் வெளிவருவதற்கு முன் உள்ள எதிர்பார்ப்பும், ஆர்வமும் வெளிவந்ததிற்கு பிறகு குறைந்ததற்கு காரணம் படம் கதை நன்றாக இல்லை. அது,இது என ஆயிரம் கதைகள் சொல்கிறார்கள்.
ஆனால் படம் உண்மையில் படம் அந்த அளவிற்கு, படத்தில் கதை இல்லை என்று சொல்லும் அளவிற்கு படம் மோசமாக இல்லை. மக்களுக்கு கூலி பற்றிய மனநிலைமையை மோசமாக மாற்றி விட்டதற்கு சமூக வலைத்தளங்களும் ஒரு காரணமாக இப்போது கருதப்படுகிறது.
புஷ்பா 2-ஐ விட கூலி மோசமா..
ஆமாம் புஷ்பா-2 என்ற படம் வெளிவந்து அதற்கான ஹைப் இன்று வரை குறையவில்லை. ஆனால் புஷ்பா-2 படத்தில் கூலியை விட கதை இருக்கிறதா என்று பார்த்தால் சற்று சந்தகமே.
புஷ்பா-2 படத்தை கூலியுடன் ஒப்பிட்டு பார்க்கையில் எவ்வளவோ கூலி படம் பரவாயில்லை என்றுதான் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட புஷ்பா-2 படம் இன்று ப்ளாக்பஸ்டர் கொடுத்த போது கூலி படம் தாராளமாக அதை எட்டி விடும்.
ஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால் சில சமூக வலைத்தளங்களில் உள்ள சினிமா பட விமர்சகர்கள் ரஜினி எதிராளிகளிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு கூலி படத்தை பற்றி எதிர்மறையான விமர்சனத்தை முன்வைத்தது தான் இந்த நிலைமைக்கு காரணம் என திரைவட்டத்தில் பேசிக்கொள்கிறார்கள்.
கூலி படம் மட்டுமல்லாமல், தற்போது வெளியிடப்படும் அனைத்து படங்களுமே நல்ல கதையை கொண்டிருந்தாலும், சில மோசமான விமர்சகர்களால் நல்ல படங்களும் வெளியில் தெரியாமல் போகிறது. இதை இப்போதே கண்டித்தாக வேண்டும் என திரையுலகத்தில் உள்ளவர்கள் கொந்தளிக்கிறார்களாம்.