ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், விஜி பற்றிய உண்மையான முகத்தை தெரிந்து கொண்டும் வெளியே அனுப்ப முடியாமல் ராமச்சந்திரன் வீட்டில் விஜியை வைத்ததால் ஒவ்வொரு பிரச்சனையிலும் ராமச்சந்திரன் குடும்பம் மாட்டிக் கொண்டது. அதன்படி வீட்டிற்குள் இருக்கும் பத்திரத்தை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று ஒரு போலியான சாமியாரை அனுப்பி விஜி திருட பார்த்தார்.
ஆனால் அது முடியாது என்று தெரிந்ததும் விஜி வேற ஏதாவது பிளான் பண்ணி சொத்து பத்திரத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அதற்குள் விஜி அம்மாவை வைத்து பிளான் போடும் வகையில் மாறன் வீரா அடியாட்களை வைத்து விஜி அம்மாவை கட்டிப்போட்டு பணம் கேட்டு மிரட்டி விட்டார்கள். அதன் படி விஜி பணத்தை எடுத்துட்டு வந்த பொழுது அங்கே போலீஸ் வந்து விஜி அம்மாவை காப்பாற்றும் படி டிராமா போடுகிறார்கள்.
அடுத்து விஜி இதுவரை செய்த தவறுகளை எல்லாம் வாக்குமூலமாக சொல்லும் விதமாக விஜி வாயாலேயே சொல்ல வைத்து அதை மாறன் வீரா வீடியோ எடுத்து விடுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் போலியான போலீஸ் என்று தெரிந்ததும் விஜி அடியால் மூலம் மாறனை சுட சொல்லி விடுகிறார்.
அப்படி அவர்கள் மாறனை சுடும் பொழுது மாறனை காப்பாற்றும் விதமாக வீரா குறுக்கே விழுந்து விடுகிறார். இதனால் வீராவுக்கு அடிபட்ட நிலையில் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்.