Vijayakanth : நடிகர் விஜயகாந்த் என்றாலே திரையுலகம் மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் பிடித்த ஒருவர். அவர் நடிகராகவும் திரையுலகத்தை ஜெயித்துவிட்டார். அரசியல்வாதியாகவும் தமிழக மக்கள் மனதையும் ஜெயித்து விட்டார்.
தற்போது அவரை இழந்தது தமிழ்நாட்டுக்கே பெரிய இழப்புதான். ஆனால் அவரது இடத்தை யாருக்கும் நிரப்ப முடியாது. என்னதான் விஜயகாந்த் மகன்கள் சிங்கம் போல் இருந்தாலும், விஜயகாந்தின் சாயலே தெரிகிறது. விஜயகாந்த் போல் தோன்றவில்லை என்றும் மக்கள் வருந்துகிறார்கள்.
துரோகம் செஞ்ச வடிவேலு..
விஜயகாந்த் அரசியலில் களமிறங்கிய போது, நேரிடையாக எதிர்த்தவர் நிறைய பேர் இருந்தார்கள். ஆனால் கூடவே இருந்து விஜயகாந்த்திருக்கு துரோகம் செய்த வடிவேலுவையும் அனைவர்க்கும் தெரியும்.
தன்னை தூக்கிவிட்ட விஜயகாந்தையே எதிர்த்து திமுக சார்பில் பிரச்சாரம் செய்தார் வடிவேலு. இதனால் அவரது செல்வாக்கு முழுவதுமாக திரையுலகத்தில் காலியாகிவிட்டது. இதிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை வடிவேலு.
இந்த தாக்கமும், இந்த துரோகமும் அவர் இறந்து போனாலும் கூட மகன்கள் மறக்கவில்லை. இதைப்பற்றி தற்போது விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் கூறுகையில். நாங்கள் எங்க சொந்த மாமாவை பார்த்தது போலத்தான் வடிவேலு மாமாவையும் பார்த்தோம்.
ஆனால் அவர் எங்கள் கண்முன்னே எங்களுக்கு துரோகம் செய்தார், அதை நங்கள் யாரும் மறக்கமாட்டோம் என்றும் கூறியுள்ளார். இந்த துரோகத்தை நாங்கள் சிறுவயதிலியே பார்த்து விட்டோம். அதனால் இப்போது எது வந்தாலும் தாங்கிக்கொள்ள கூடிய அளவிற்கு எங்ளுக்கு அனுபவம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.