தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரமாக விளங்கும் தளபதி விஜய், திரையுலகத்தில் மட்டுமல்ல அரசியலிலும் தன்னுடைய புதிய பயணத்தை தொடங்கியுள்ளார். ஏற்கனவே பல வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குனர்கள் புதிய கதைகள் மற்றும் தொடர்ச்சி படங்களை உருவாக்க விஜயை அணுக முயற்சி செய்கிறார்கள். அப்படிப்பட்ட 5 இயக்குனர்களை பார்க்கலாம்.
ஏ.ஆர். முருகதாஸ் துப்பாக்கி, கத்தி,சர்கார் போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களை விஜயுடன் இணைந்து இயக்கியனார். இவர் தற்போது துப்பாக்கி 2 படத்தை மீண்டும் விஜயுடன் செய்ய ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் மாஸ்டர், லியோ போன்ற இரண்டு வெற்றிப் படங்களை விஜயுடன் இணைந்து வழங்கியவர். இவருக்கு “மாஸ்டர் 2” மற்றும் “லியோ 2” போன்ற படங்களை உருவாக்கும் ஆர்வம் உள்ளது. அதுவும் விஜயை வைத்து எடுக்க ஆசை என்றும் கூறியுள்ளார். ஆனால் விஜயின் பிசியான அரசியல் பயணம் இவரின் கனவை உடனடியாக நினைவாக்குமா என்பது தெரியவில்லை.
அட்லீ தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று ஹிட் படங்களையும் விஜயுடன் இணைந்து எடுத்தவர். தற்போது இவர் விஜயுடன் மீண்டும் இணைந்து ஒரு மிகப்பெரிய பிக் படத்தை உருவாக்க விரும்புகிறார். ஆனால் ரசிகர்கள், விஜய் அரசியலில் அதிக நேரம் செலவிடுவதால் இது சாத்தியமாகுமா என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
வெற்றிமாறன் ஆடுகளம் அசுரன் விடுதலை போன்ற படங்களை இயக்கியவர். அசுரன் ரிலீசுக்கு பிறகு விஜய்யை சந்தித்து ஒரு படம் பற்றி பேசியதாகவும் ஆனால் அந்த நேரத்தில் உறுதி ஆகவில்லை. தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள படங்களை முடித்த பிறகு எதிர்காலத்தில் விஜய் சாருடன் படம் செய்வேன் என்று கூறியுள்ளார்.
பேட்ட, ஜிகர்தண்டா, pizza போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ்
தளபதி விஜய்யுடன் பணியாற்ற இரண்டு முறை முயற்சித்ததாக தெரிவித்துள்ளார். அவர் சொன்ன இரண்டு கதைகளும் விஜய்க்கு பிடிக்காததால் திட்டம் நடக்கவில்லை என்றும், விரைவில் அவருக்குப் பிடிக்கும் கதையுடன் மீண்டும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
விஜயுடன் மீண்டும் படம் எடுக்க இயக்குனர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் தற்போது அரசியலில் பிஸியாக இருப்பதால், இந்த கூட்டணிகள் எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.