விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா ஆபீஸ் வந்த பிறகு சோழன் போன் பண்ணி பேசுகிறார். அப்பொழுது அங்கே இருந்த மேனேஜர் ஒருவர் வேறு ஒருவரை திட்டிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த நிலா போனை கட் பண்ணி விடுகிறார். உடனே சோழன், நிலாவுக்கு ஆபீஸில் ஏதோ ஒரு பிரச்சனை யாரோ திட்டுகிறார்கள் என்று தவறாக புரிந்து கொண்டார்.
உடனே நிலாவின் ஆபிசுக்கு பக்கத்தில் நின்று சோழன் போன் பண்ணுகிறார். ஆனால் நிலா வேலையில் பிஸியாக இருந்ததால் போனை எடுக்கவில்லை. இதனால் சோழன் ஆஃபீஸ்க்குள் சென்று பிரச்சனை பண்ணும் விதமாக நிலவிடம் உங்களை யார் திட்டினார்கள் என்று ரவுடித்தனம் பண்ண ஆரம்பித்து விட்டார்.
உடனே அங்கு இருந்த மேனேஜர் என்னாச்சு என்ன பிரச்சனை என்று கேட்கும் பொழுது அவரையும் திட்டி விட்டு நீ தான் நிலாவை திட்டுனியா என்று சண்டை போட ஆரம்பித்து விடுகிறார். இதனால் ஆபீஸில் குளறுபடிகள் ஏற்பட்ட பொழுது பாஸ் ராகவன் வந்து நிலாவிடம் என்ன இதெல்லாம் என்று கேட்கிறார்.
உடனே நிலா, சோழனை கூட்டிட்டு போய் அவர் என்னை திட்டவில்லை. இதில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று வெளியே அனுப்பி விடுகிறார். பிறகு ஆஃபீஸ்க்குள் போன நிலா அங்க இருப்பவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறார். அடுத்ததாக வீட்டிற்கு வந்ததும் சோழன் இதை பெருமையாக பேசிய நிலையில் கடுப்பான நிலா ஆக்ரோஷத்துடன் சோழனை வாய்க்கு வந்தபடி திட்டி லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுகிறார்.
நிலா, சோழனை திட்டும் பொழுது பக்கத்தில் பல்லவன் மற்றும் சேரன் இருந்தும் நிலாவுக்கு சப்போர்ட் பண்ணியதால் சோழன் கொஞ்சம் கடுப்பாகிவிட்டார். அப்பொழுது பாண்டியன் வீட்டிற்கு வந்து விஷயத்தை கேள்விப்பட்டதும் பாண்டியனும் சோழனை திட்டி நக்கல் அடிக்கிறார்.
உடனே பாண்டியனுக்கும் சோழனுக்கும் சண்டை ஆரம்பித்து விட்டது. அப்பொழுது நடேசனும் நிலாவுக்கு சப்போர்ட் பண்ணி பேசியதால் சோழன் ஆத்திரத்தில் அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அப்படி கோபத்துடன் போகும்பொழுது சின்ன விபத்து ஏற்பட்டு விடுகிறது. போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி சோழன் மீது எஃப்ஐஆர் போடும் அளவிற்கு பிரச்சனை ஆகி விடுகிறது. சோழனை காப்பாற்றும் விதமாக சேரன் மற்றும் நிலா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கெஞ்சுகிறார்கள்.