Coolie Collection : கூலி படம் தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டது. இதனால் எதிர்பார்த்ததை விட ஒரு பெரிய லாபத்தை பெறலாம் என்பதுதான். கலாநிதி மாறன் தயாரித்த இப்படத்தில் ரஜினி, நாகார்ஜுனா என எக்கச்சக்கமான பிரபலங்கள் நடித்திருந்தனர்.
ரிலீசுக்கு முன்பு பிரீ பிசினஸில் கூலி படம் மிகப்பெரிய சாதனையை படைத்தது. இந்த சூழலில் முதல் நாளே கூலி படம் 151 கோடி வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த சூழலில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வசூல் வேட்டையாடி இருக்கிறது.
நேற்றைய தினம் மட்டும் கிட்டத்தட்ட இந்திய அளவில் 164 கோடி வசூலை பெற்றிருக்கிறது. மேலும் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் 410 கோடி வசூல் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
கூலி நான்காவது நாள் வசூல்
மேலும் இன்றிலிருந்து வேலை நாட்கள் என்பதால் கூலி படத்தின் வசூல் குறைய வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் மிக விரைவில் கூலி படம் 500 கோடி கிளப்பில் இணைவது உறுதியாக உள்ளது. படத்திற்கு நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
ஆனாலும் அவற்றை எல்லாம் தகர்த்தெறிந்துவிட்டு வசூலில் வேட்டையாடுகிறது. இதுவரை ரஜினி படங்களில் அதிக வசூல் செய்த படமாக ஜெயிலர் படம் இருந்து வருகிறது. அதை கண்டிப்பாக கூலி படம் முறியடிக்கும்.
அதோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் முதல் ஆயிரம் கோடி வசூல் அடிக்கும் படமாக கூலி படம் இருக்கும் என ரஜினி ரசிகர்கள் நம்புகிறார்கள். அவர்களது நம்பிக்கை நிறைவேறுகிறதா என்பது இன்னும் சில வாரங்களில் தெரியவரும்.