sirakadikkum asai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணியின் அம்மா வீட்டுக்கு முத்து மீனாவும் போய் பார்க்கிறார்கள். ஆனால் அதற்குள் ரோகிணி அந்த வீட்டை காலி பண்ணி விட்டு கிரிசை கூட்டிட்டு கிளம்பி விடுகிறார். இந்த விஷயத்தை ஓனர் மூலம் முத்து மீனா தெரிந்து கொண்டபின் அவர்களை தேடி அலைகிறார்கள்.
ஆனால் அதற்குள் ரோகிணி அங்கிருந்து கிரிசை கூட்டிட்டு போய்விடுகிறார். பிறகு சுருதி ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்க போவதாக இன்விடேஷன் கார்டு அடித்து வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுக்கிறார். அடுத்ததாக சீதா கோவிலுக்கு போவதாக மீனாவை போன் பண்ணி கூப்பிடுகிறார். மீனா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது அதனால் என்னால் வர முடியாது.
ஆனால் நீங்கள் நாளைக்கு கோவிலுக்கு கிளம்பும் பொழுது நான் வந்துட்டு போகிறேன் என்று சொல்லிவிடுகிறார். அப்பொழுது முத்து, பணத்தை கொடுத்து இது உங்க அம்மா கை செலவுக்காக இருக்கட்டும் கொடுத்துட்டு வா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். மீனா அந்த பணத்தை எடுத்துட்டு சீதா வீட்டுக்கு போய் அம்மாவிடம் கொடுக்கிறார்.
இதை பார்த்து கடுப்பான அருண், நான்தான் அவர்களை கூட்டிட்டு போகிறேன் என்னால் பார்த்துக் கொள்ள முடியாதா. எதற்கு தேவையில்லாமல் நீங்கள் பணத்தை கொடுக்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு சீதா, மாமா எப்போதும் வழக்கமாக செய்வது தான். அதனால் இதை பெரிசு படுத்த வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். இருந்தாலும் அருணுக்கு இது ஒரு அவமானமாக போய்விட்டது.
அடுத்ததாக மனோஜ் மற்றும் ரோகினி ஷோரூம் இல் இருக்கும் பொழுது அந்த ராஜா ராணி வருகிறார்கள். அவர்களைப் பார்த்ததும் மனோஜ் பணத்தை ரெடி பண்ணி விட்டாயா குடு என்று கேட்கிறார். அதற்கு அந்த ராஜா எதுனாலும் என்னுடைய லாயர் கிட்ட பேசிக்கொள்ளுங்கள் என்று லாயரை கூட்டிட்டு வருகிறார். லாயர் வந்ததும் நீங்கள் இந்த ராணியிடம் தவறாக நடந்து கொண்டு இருக்கீங்க.
அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது, அதை போலீஸிடம் காட்டினால் உங்களுக்கு பரவாயில்லையா என்று கேட்கிறார். உடனே மனோஜ் நான் அப்படி ஏதும் பண்ண வில்லை என்று சொல்லிய பொழுது லாயர் ஆதாரத்தை காட்டவா என்று மிரட்ட ஆரம்பிக்கிறார். அப்பொழுது மனோஜ் நான் இதற்கு என்ன பண்ணனும் என்று கேட்ட நிலையில், லாயர் அவங்க திருடிவிட்டதாக சொல்லிய மூன்று லட்ச ரூபாய் பணத்தை நீங்கள் அவர்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று ஆப்பு வைத்து விடுகிறார்.
இதையெல்லாம் பார்த்தும் ரோகிணி வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார். ரோகினியால் தான் இந்த பிரச்சனை வந்திருக்கிறது என்று தெரிந்தும் மனோஜை இக்கட்டான சூழ்நிலையில் தவிக்க விடுகிறார். பாவம் இது எதுவும் தெரியாமல் மனோஜை பொத்தி பொத்தி வளர்த்த விஜயாவுக்கு ரோகிணி மறைமுகமாக டார்ச்சர் கொடுக்கிறார்.