தமிழ் சினிமாவிற்குள் 2017ஆம் ஆண்டு மிக ஸ்ட்ராங்காக அறிமுகமானவர் அந்த ஹீரோ. பல திறமைகளை கையில் வைத்து கொண்டு உள்ளே புகுந்தார். ஆனால் இன்று 8 வருடங்கள் ஆகியும் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார். இதனால் ஆரம்பத்தில் அவருக்கு கை கொடுத்து உதவியை இயக்குனரிடமே இப்பொழுது சரண்டராகி உள்ளார்.
இயக்குனர், எழுத்தாளர், இசையமைப்பாளர் என பன்முகத்தோடு சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி.
இவர் 2017 ஆம் ஆண்டு மீசைய முறுக்கு என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்திற்கு இவர் தான் இயக்குனர் மற்றும் எழுத்தாளர். இந்த படத்தை தயாரித்தது சுந்தர் சியின் AVNI பிலிம்ஸ்.
ஹிப் ஹாப் தமிழா நடித்த முதல் மூன்று படங்களையும் சுந்தர் சி தான் தயாரித்துள்ளார். இப்படி ஆரம்பத்தில் இருந்தே அவரை சீராட்டி சினிமாவில் வளர்த்து விட்டது சுந்தர் தான். அதன் பிறகு சத்தியஜோதி நிறுவனம் இவர் நடித்த இரண்டு படங்களை தயாரித்தது. கடைசியாக “பி டி சார்” என்ற படத்தில் நடித்தார். அதை வேல்ஸ் நிறுவனம் தயாரித்தது.
சமீப காலமாக சுந்தர் சி இயக்கிய படங்களுக்கெல்லாம் இவர்தான் மியூசிக் போட்டு வந்தார். ஒரு கட்டத்துக்கு மேல் இருவருக்குமே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். ஆனால் இன்று வரை ஹிப்ஹாப் ஆதியால் நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை.
இவர்கள் கூட்டணியில் முதலில் உருவான மீசைய முறுக்கு படம் ஹிட் அடித்தது. 4 கோடியில் எடுக்கப்பட்ட அந்த படம் 7 கோடி வரை தமிழ்நாட்டில் சேர் கொடுத்ததாம். அதனால் அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு இப்பொழுது வளர்த்துவிட்ட சுந்தர் சி இடமே சரண்டராகி உள்ளார் ஆதி.
மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாதத்தில் நயன்தாரா, அங்க வரமாட்டேன், இங்க வரமாட்டேன், வேறு ஆடை கொடுங்கள் என கொடுத்த டார்சரையே சமாளித்து கொட்டத்தை அடக்கினார் இயக்குனர் சுந்தர்சி. எதையும் கண்டு கொள்ளாமல் நல்ல ஜாலியாக சூட்டிங் ஸ்பாட்டில் நடந்து கொள்பவர். இதனால் இவருடன் வேலை செய்ய அனைவருக்கும் பிடிக்கும்.