தமிழ் சினிமாவில் பல்வேறு பரிமாணங்களில் தன்னை நிரூபித்த தனுஷ், இயக்குநராகவும் தனி தடம் பதித்துள்ளார். அவரது நான்காவது இயக்குநர் முயற்சியாக வரும் படம் தான் இட்லி கடை. இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
படத்தில் தனுஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்தின் இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் மேற்கொள்கிறார். இசை மற்றும் கதை சொல்லும் பாணி இந்த படத்தின் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷின் கலை வாசனைக்கும், ஜி.வி யின் இசைக்கும் ரசிகர்கள் வியப்புடன் காத்திருக்கிறார்கள்.
‘ஆடுகளத்தில்’ நடிக்க முடியாமலும், ‘சூதாடி’ இடையில் நின்று போனது, ஒரு வருத்தமாக இருந்தது என கூறிய பார்த்திபன் இந்த படத்தில் கேமியோ ரோலில் களமிறங்கி இருக்கிறார் என்றும் அதற்கான டப்பிங் வேலைகள் முடிந்து விட்டது என்ற தகவல் வெளிவந்துள்ளது.
கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்துள்ளார் பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பை கவனித்துள்ளார். ஜாக்கி தயாரிப்பு வடிவமைப்பில் பங்களித்துள்ளார். இந்த தொழில்நுட்பக் குழுவின் திறமை, படத்தின் தரத்தை உயர்த்தும் என்று நம்பப்படுகிறது.
இட்லி கடை படத்தை டான் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. ஆகாஷ் பாஸ்கரன் தனுஷ் தயாரிப்பாளர் களாகவும், ஸ்ரேயாஸ் ஸ்ரீனிவாசன் நிர்வாக தயாரிப்பாளராகவும் உள்ளனர்.
இப்படம் தனுஷின் பல்துறை திறமையை மீண்டும் வெளிப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. சக்தியோடு சுறுசுறுப்போடு சகலகலாவல்லவனாக அவர் ரசிகர்களை கவர போகிறார். அக்டோபர் மாதம் வெளிவரும் இட்லி கடை இந்த ஆண்டு ரசிகர்களுக்கு மறக்க முடியாத விருந்து தரும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.