Getti melam serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற கெட்டிமேளம் சீரியலில், மகேஷ் பற்றிய உண்மையான ரகசியம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளி வருகிறது. ஆரம்பத்தில் அஞ்சலிக்கு மட்டும் மகேஷ் மீது சந்தேகம் இருந்தத. அந்த வகையில் ரூம்குள் அடைக்கப்பட்டிருந்த முருகனின் அம்மாவை சந்தித்ததற்குப் பிறகு அஞ்சலி அங்கே இருந்து கிளம்பி விடுகிறார்.
அதன் பின் பாட்டி கண்விழித்து மகேஷ் கெட்டவன் என்று சில விஷயங்களை சிவராமனிடம் சொன்னதும் சிவராமன் மகேஷ் வீட்டிற்கு வருகிறார். வந்த பொழுது ரூமுக்குள் இருந்த முருகனின் அம்மாவை பார்த்து விடுகிறார். உடனே முருகனுக்கு போன் பண்ணி உன்னுடைய அம்மா உயிரோடு இருக்கிறார் என்று சொல்கிறார். ஆனால் முருகனுக்கு எதுவும் புரியாததால் நேரடியாக பார்த்து சொல்லலாம் என்று சிவராமன் அங்கு இருந்து கிளம்பி விடுகிறார்.
ஆனால் அதற்குள் மகேஷுக்கு, சிவராமனுக்கு எல்லா விஷயமும் தெரிந்து விட்டது என்றதும் சிவராமனை தூக்குவதற்கு ஆள் அனுப்பி விடுகிறார். இன்னொரு பக்கம் முருகனை காலி பண்ண சொல்லிவிடுகிறார். உடனே மகேஷ் ஆட்கள் முருகனை ரயில்வே தண்டவாளத்தில் வைத்து கட்டி விடுகிறார்கள். ஆனால் எப்படியோ சிவராமன் போய் முருகனை அங்கிருந்து காப்பாற்றுகிறார்.
ஆனால் முருகன் கால் தண்டவாளத்தில் மாட்டிக் கொண்டதால் அங்கு இருந்து முருகன் வெளியே வர முடியவில்லை. இருந்தாலும் சிவராமன் கடைசி நிமிடம் வரை காப்பாற்றுவதற்கு முயற்சி எடுக்கிறார். கடைசியில் ட்ரெயின் வந்துவிடுகிறது இதனால் யாருடைய உயிருக்கு ஆபத்தாக போகிறது என்பது பதட்டத்துடன் இருக்கிறது. இன்னொரு பக்கம் இவர்கள் இருவருக்கும் ஆபத்து என்றதும் வெற்றி துளசி இவர்களை தேடி அலைகிறார்கள்.