குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடக் கூடிய மற்றும் ஆரோக்கியம் கொடுக்கக் கூடிய இந்த வாழைப்பழ பணியார கேக் தயார் செய்வது ரொம்பவே சுலபமானது. என்னடா சாப்பிடுவது? என்று யோசிக்கும் நேரத்தில் சட்டுனு சமைத்து சுட சுட சாப்பிட்டு பார்த்தால் நாவில் எச்சில் ஊறும். பாரம்பரியமான முறையில் வாழைப்பழத்தை வைத்து பணியாரம் கேக் எப்படி தயார் செய்யப் போகிறோம்? என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
வாழைப்பழ பணியார கேக் தயார் செய்ய தேவையான பொருட்கள் :
வாழைப்பழம் – 3
கோதுமை மாவு – ஒரு கப்
நாட்டு சர்க்கரை – அரை கப்
சுக்குத்தூள் – ஒரு டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
பொடித்த நட்ஸ் வகைகள் – அரை கப்
நெய் – தேவையான அளவு
– Advertisement –
வாழைப்பழ பணியார கேக் செய்யும் முறை :
வாழைப்பழ பணியார கேக் தயார் செய்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் முதலில் எடுத்து வையுங்கள். எந்த வாழைப்பழத்தை வேண்டுமானாலும், இந்த கேக் செய்வதற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். முதலில் மூன்று வாழைப்பழங்களை தோல் உரித்து துண்டு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸர் ஜாரை கழுவி எடுத்து, அதில் இதனை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள்.
கோதுமை மாவை எந்த கப்பில் எடுத்தீர்களோ, அந்த கப் அளவிற்கு அரை கப் நாட்டு சர்க்கரை சேர்க்க வேண்டும். நாட்டு சர்க்கரைக்கு பதிலாக நீங்கள் பொடித்த வெல்லத்தையும் சேர்க்கலாம். பின்னர் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சுக்குத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். அரை டீஸ்பூன் அளவிற்கு ஏலக்காய் தூள் சேர்க்க வேண்டும். ஏலக்காய் தூள் இல்லை என்றால், மூன்று ஏலக்காய்களை இடித்து சேருங்கள். சுவை கூடுவதற்கு ஒரு சிட்டிகை அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து விடுங்கள்.
– Advertisement –
இப்போது அரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மிக்ஸியை இயக்கி, நன்கு நைசாக எல்லாவற்றையும் அரைத்துக் கொள்ள வேண்டும். கெட்டியான மாவு பதத்திற்கு வந்து விடும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதில் ஒரு பேன் ஒன்றை வையுங்கள். தேவையான அளவிற்கு நெய் விட்டு பரப்புங்கள். பின்னர் இந்த மாவுடன் நீங்கள் விருப்பப்பட்ட அளவிற்கு நட்ஸ் வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே:
வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும் ஆவணி தசமி
ரொம்பவும் பொடி பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர் திராட்சைகளை சேர்த்து கலந்து வைக்கலாம். பின்னர் பேனில் நெய் காய்ந்ததும், இந்த மாவை எடுத்து ஊற்றி கெட்டியாக பரப்புங்கள். கேக் போல நன்கு உப்பி வரும். ஒருமுறை நன்கு வெந்து வந்ததும், மறுபுறம் திருப்பி போட்டு வேக விடுங்கள். இரண்டு புறமும் பொன்னிறமாக சிவந்து வந்ததும், எடுத்து தட்டில் வைத்து பரிமாற வேண்டியதுதான். இதே போல எல்லா மாவையும் ஊற்றி பணியாரம் கேக் எளிமையாக தயார் செய்துவிடலாம். அனைவரும் விரும்பும், இந்த பனானா பணியார கேக் நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.