சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மூன்று முடிச்சு சீரியலில், குடிபோ**தையில் இருக்கும் சூர்யாவுக்கு நந்தினியின் மனசு எந்த அளவுக்கு காயப்பட்டு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. சூர்யாவை பொருத்தவரை சுந்தரவள்ளியை காயப்படுத்த வேண்டும், அதற்கு என்ன வேணாலும் பண்ணலாம் என்று நந்தினியை பகடைக்காயாக பயன்படுத்துகிறார்.
நந்தினி என்ன நினைக்கிறார் நந்தினிக்கு என்ன ஆசை இருக்கிறது, நந்தினியின் விருப்பம் என்னவென்று எதையும் தெரிந்து கொள்ளாமல் ஒவ்வொரு விஷயத்திலும் சூர்யா, நந்தினியை லாக் பண்ணி விடுகிறார். தற்போது கூட சூர்யாவின் கை சரியாகி விட்டது என்று தெரிந்ததும் நந்தினி, இனி நீங்களே ஆபீஸ் விஷயத்தில் கையெழுத்து போடுங்கள் என்னால் முடியாது.
அதற்கான தகுதி என்னிடம் இல்லை, நான் கையெழுத்து போட வேண்டும் என்றால் கொஞ்சம் ஆவது எனக்கு சில விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எனக்கு எதுவும் தெரியாத பட்சத்தில் சும்மா கோடி கணக்கில் இருக்கும் விஷயத்தில் என்னால் கையெழுத்து போடுவதற்கு மனசு வரவில்லை. என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சுகிறார்.
ஆனால் சூர்யா, நந்தினிக்கு நல்லது செய்கிறேன் என்ற நினைப்பில் தான் ஆட்டி வைக்கும் பொம்மையாக நந்தினியை பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில் சட்டப்படி கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ண வேண்டும் என்று சூர்யா முடிவு பண்ணி அதற்கான வேலைகளில் இறங்கி விட்டார். ஆனால் முறைப்படியும் சட்டப் படியும் நந்தினியின் கணவராக இருக்கும் சூர்யா அதற்கு ஏற்ற மாதிரி நந்தனிடம் நடந்து கொள்ளவே இல்லை.
எப்ப பார்த்தாலும் குடித்துவிட்டு ரகளை பண்ணுவது, நந்தினியின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் பல விஷயங்களை செய்து வருகிறார். இப்பொழுது கூட சூர்யாவின் அப்பா, கல்யாணத்தை ரிஜிஸ்ட்ரேஷன் பண்ண வேண்டும் என்ற முடிவு நந்தினி மீது இருக்கும் அன்பால் எடுத்தியா என்று கேட்டபோது, அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் கிராமத்தில் இருந்து வந்த பெண்ணான நந்தினிக்கு ஒரு நல்ல வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று பண்ணுகிறேன் என சொல்கிறார்.
இதெல்லாம் கொடுத்து விட்டால் ஒரு பெண்ணுக்கு நிம்மதி கிடைத்து விடும் என்று சூர்யா தவறான கருத்துடன் இருக்கிறார். அட்லீஸ்ட் இனியாவது சூர்யாவை குடிப்பழத்தில் இருந்து மாற்றி ஒரு பொறுப்பான கணவராக இருந்து நந்தினியை மனதார காதலித்து கணவன் மனைவியாக வாழ்க்கையை நடத்தும் விதமாக கதை அமைந்தால் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.