சர்தார் படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படி கார்த்திக்கு எந்த படமும் கை கொடுக்கவில்லை. ஜப்பான், மெய்யழகன், என அடுத்தடுத்து தோல்விகள். இப்பொழுது வெற்றி கொடுத்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் சர்தார் 2 ஜருராக ரெடியாகிக் கொண்டிருக்கிறது.
கொடுத்த கால் சீட்டுக்கு மேல நடித்துக் கொண்டிருக்கிறார் கார்த்திக்.ஆரம்பத்தில் இதற்கு 120 நாட்கள் தான் பேசப்பட்டது இருந்தாலும் இப்பொழுது 150 நாட்களை தாண்டி படம் போய்க் கொண்டிருக்கிறது. வெளிநாட்டில் ரகசிய உளவாளியாக இருக்கும் கதை என்பதால் செட் போட்டு ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதுபோக கார்த்தி, இயக்குனர் தமிழ் கூட்டணியில் மார்சல் என்ற படத்தில் நடித்த கொண்டிருக்கிறார். வா வாத்தியார் என்ற மற்றொரு படத்திலும் நடித்து வருகிறார். இதில் மார்சல் படத்தில் அவருக்கு வில்லனாக மலையாள நடிகர் நிவின்பாலி கமிட்டாகி உள்ளார். அவரது கால்சீட் பிஸியாக இருப்பதால் தொய்வு ஏற்பட்டு வருகிறது.
நிவின் பாலி கைவசம் அரை டசன் படங்கள் வைத்திருக்கிறார் ஏற்கனவே அவர் தமிழில் “ஏழு கடல் ஏழுமலை” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுபோக ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் பென்ஸ் படத்திலும் நடித்து வருகிறார். அதனால் அவரது கால் சீட் கிடைப்பது எளிதல்ல.
ஒரு கால் இந்த படத்தில் நிவின் பாலி நடிக்க முடியாவிட்டால் இப்பொழுது மற்றொரு மலையாள வில்லன் நடிகரான சௌபின் ஜாகீரை தேர்ந்தெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கூலி படத்தில் இவர் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது. அதனால் அடுத்து வரும் காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் சௌபின் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.