ஜி தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், புவனேஸ்வரி விட மோசமாக மாறிய கார்த்திக், கதிரை பழிவாங்கி ராமச்சந்திரன் குடும்பத்தை நிம்மதி இல்லாமல் ஆக்க வேண்டும் என்று அலைகிறார். அதற்காக கோவிலில் நடக்கும் பூஜையில் சொல்ல மாடன் சாமியாக வந்து ரகுராம் கதையை முடித்து விடலாம் என்று நினைத்தார்.
ஆனால் இதை தெரிந்து கொண்ட கதிர், மாமனாரை காப்பாற்றும் விதமாக கார்த்திக்கிடம் சண்டை போடுகிறார். கடைசியில் கார்த்தி, கத்தியை வைத்து கதிர் வயிற்றில் குற்றி விடுகிறார். இதனால் உயிருக்கு போராடும் நிலையில் கதிர் அபாய கட்டத்தில் இருக்கிறார். கதிரை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போன மாயா தனம் கதிரை காப்பாற்றுவதற்கு முயற்சி எடுக்கிறார்கள்.
அந்த வகையில் லட்சக்கணக்கில் பணம் செலவாகும் என்றதும் தனம், புருஷனுக்காக போட்டியில் கலந்து கொண்டு அந்த பணத்தின் மூலம் கதிரை காப்பாற்றலாம் என்று விளையாட ஆரம்பிக்கிறார். ஆனால் எதுவும் தெரியாமல் ரகுராம், கதிர் மீது கோபமாக இருந்த நிலையில் தற்போது ஜானகி மூலம் அனைத்து உண்மைகளும் தெரிய வரப்போகிறது.
அதன்பின் ரகுராமுக்கு மாயா மற்றும் கதிர் மீது இருந்த கோபம் தீர்ந்து போய் ஏற்றுக்கொள்வார். அதே நேரத்தில் புவனேஸ்வரி மற்றும் கார்த்திக்கின் ஆட்டம் இதோடு கிளோஸ் என்பதற்கு ஏற்ப இவர்களுடைய சூழ்ச்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடுவார்.