திரையுலகில் மார்க்கெட்டிங் மற்றும் எதிர்மறை பிரச்சாரம் செய்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல. சில விமர்சகர்கள் போட்டியாளர்களிடம் இருந்து பணம் பெற்று எதிர்மறை கருத்துகளைப் பதிவு செய்வது வழக்கமான நடைமுறையாக பார்க்கப்படுகிறது. அதேபோல், தற்போது ரஜினிகாந்தின் கூலி படம் தொடர்பாகவும் இதே நிலை ஏற்பட்டுள்ளது.
சதி திட்டம் தீட்டிய டாப் ஹீரோ
பிரசாந்த் என்ற விமர்சகர், கூலி படத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். அது ரஜினி ரசிகர்களிடம் எதிரொலியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து
சமீபத்தில் வரும் சில தகவல்களின் படி, டாப் நடிகர் ஒருவர் இந்த எதிர்மறை பிரச்சாரத்தின் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் செல்வாக்கை குறைக்க அவர் இத்தகைய முயற்சி செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பி ஆர் வேலைக்கு சுமார் ₹20 கோடி வரை செலவழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அந்த டாப் நடிகர் யார் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. இந்த எதிர்மறை விமர்சனத்தால் படம் தோல்வி அடையும் என எதிர்பார்த்த நிலையில் இவர்களின் சதி முயற்சி ரஜினிக்கும் கூலி படத்துக்கும் சாதகமாக மாறி உள்ளது.
எதிர்மறை பிரச்சாரம் ரசிகர்களை அதிகம் திரையரங்குகளுக்கு வருவதற்கு காரணமாக அமைந்து Coolie Blockbuster போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகி, படத்திற்கு கூடுதல் கவனத்தை பெற்றுத்தந்தன. மேலும் 4 நாட்களில் 400 கோடி வசூலை தட்டி தூக்கி உள்ளது.
சதி முயற்சிகள் இருந்தாலும், ரஜினிகாந்தின் புகழும் ரசிகர் ஆதரவும் கூலி படத்தை அதிக வசூல் செய்த படமாக சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். பெரிய தொகை செலவிட்ட எதிர்மறை பிரசாரம் எதிர்மாறாக பலன் தந்தது. இறுதியில் கூலி படம் சர்ச்சையால் அல்ல ரசிகர்களின் உற்சாகத்தால் வெற்றி நடை போடுகிறது.