இந்திய அணியில் முகமது அசாருதீன் ஊழல் புகாரில் சிக்கிய பின் கேப்டன் பொறுப்பை தூக்கி சச்சின் டெண்டுல்கர் இடம் கொடுத்தனர். ஆனால் அதற்கு அவர் சரிப்பட்டு வரவில்லை. பணிச்சுமை காரணமாக தொடர்ந்து பேட்டிங்கில் டல் பர்பாமன்ஸ் காட்டினார். அதனால் 2000 ஆண்டுக்குப் பிறகு முழுநேர கேப்டனாக கங்குலி தலைமையேற்றார்,
7 பேட்ஸ்மேன்கள் 4 பவுலர்கள் என இந்திய அணியை வலுவாக கட்டமைத்தார் கேப்டன் கங்குலி. இவர் காலகட்டத்தில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு வெற்றி ரெக்கார்டை அதிகமாகியது. பல அதிரடி இளம் வீரர்களை அணிக்காக உருவாக்கித் தந்தார் தாதா கங்குலி. இவருக்கு பின் இந்திய அணிக்கு கேப்டனாக வந்தவர்தான் மகேந்திர சிங் தோனி.
இளம் வீரர்கள் தான் வேண்டும் என பிசிசிஐக்கு சவால் விட்டு புதிதாய் ஒரு அணியை உருவாக்க திட்டம் போட்டார். இவரது திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இந்திய அணியின் இளம்படைகள் பல போட்டிகளில் அசால்ட்டாக வெற்றி பெற்று நம்பர் ஒன் அணியாக வலம் வந்தது. இளம் வீரர்களுக்காக தோனி களையெடுத்த 3 சீனியர்ஸ்.
இர்ஃபான் பதான்: 2009 ஆம் ஆண்டுக்குப் பின் தோனி கேப்டனாக தலை எடுத்ததும் பதான் கேரியர் முடிவுக்கு வந்தது. 2012 ஆம் ஆண்டுக்குப் பின் முழுவதுமாய் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். ஸ்விங் பவுலிங் செய்து அசத்திய இவர் காயம் காரணமாகவும் வயது மூப்பு காரணமாகவும் தோனியால் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
கௌதம் கம்பீர்: இயல்பாகவே ஆக்ரோஷமான வீரர் கம்பீர். ஓரளவு நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் போதே அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். 2011 ஆம் ஆண்டு இந்தியா உலகக்கோப்பை வாங்கியதற்கு இவரும் ஒரு காரணம். ஆனால் தோனியை புகழ் பாடியதால் இவருக்கு பிடிக்கவில்லை. அதற்கு எதிராக பேசி அணியிலிருந்து விலகி விட்டார்.
யுவராஜ் சிங்: கேன்சரில் இருந்து முற்றிலும் குணமடைந்த போதிலும் இவரால் அணியில் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. வயதாகிவிட்டது, பார்ம் அவுட் போன்ற காரணங்களால் கேப்டன் பொறுப்பில் இருந்த தோனி இவர் மீது விமர்சனம் வைத்தார். இதற்கு மாற்றுக்கருத்து தெரிவித்து யுவ்ராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் மல்லு கட்டினார்