Udhayanidhi : உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்தில் சினிமாவில் நுழைந்தார். சந்தானத்துடன் அவர் இணைந்து நடித்த படங்கள் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து அரசியலில் இறங்கினார். இப்போது தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் பதவியில் இருக்கிறார்.
இந்த சூழலில் உதயநிதியின் மகன் இன்பநிதியும் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் சிஇஓவாக இன்பநிதி பதவியேற்றுகிறார். அதாவது உதயநிதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் படங்களை தயாரித்து வந்தார்.
இதைத்தொடர்ந்து படங்களை தயாரிப்பதை காட்டிலும் விநியோகம் செய்து நல்ல வருவாய் ஈட்டி வந்தார். தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களை ரெட் ஜெயன்ட் தான் வெளியிட்டு வந்தது. தற்போது லைக்கா போன்ற பெரிய நிறுவனங்களுடன் கைகோர்த்து சில படங்களையும் தயாரித்தது.
இன்பநிதிக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். இதற்கான கதையையும் அவர்களிடம் சொன்ன நிலையில் சம்மதம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
இந்த படத்தின் அறிவிப்பை ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் இன்பநிதி பதவியேற்கும் போது வெளியிட இருக்கின்றனர். கமல் மற்றும் ரஜினி இருவரும் இணைந்து நடித்தால் கண்டிப்பாக அந்த படம் பிசினஸில் படு பயங்கரமாக இருக்கும். ஆகையால் இன்பநிதியின் முதல் படமே ஒரு புளியங்கொம்பை வளைத்திருக்கிறார்கள்.
மேலும் உதயநிதியும் இவ்வாறு சினிமாவில் நுழைந்ததால் அரசியலில் இப்போது இறங்கி இருக்கிறார். அதேபோல் தற்சமயம் அவரது வாரிசு இன்பநிதியையும் சினிமாவில் இறக்குகிறார் என்ற விமர்சனங்கள் வர தொடங்கி இருக்கிறது.