ஜனனியும், ஜீவானந்தமும் சேர்ந்துதான் ஈஸ்வரியை தாக்கி கோமாநிலைக்கு தள்ளிவிட்டார்கள் என நீதிமன்றத்தில் வக்கீலின் வாதம் இருந்தது. இதனால் ஜீவானந்தத்தை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார் அதைப்போல் ஜனனி இடமும் விசாரிப்பதற்கு உத்தரவு போட்டுள்ளார்.
இதற்கிடையே குணசேகரனின் வக்கீல் நாம் ஜெயித்து விட்டோம் எனக் கூறிய உடனே குணசேகரன் டீம் அறிவுக்கரசி, முல்லை, கதிர், கரிகாலன் என அனைவரும் பாயாசம் செய்து சாப்பிடுகிறார்கள். முந்திரியை அள்ளித் தெளித்துள்ள அறிவுக்கரசியை வெகுவாக பாராட்டுகிறார் முல்லை.
இது ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கையில் எல்லாத்துக்கும் துணிந்து இறுதி கட்ட சண்டையில் இறங்கியுள்ளார் ஜனனி. இதுவரை இல்லாத ஆதரவாக அவருடைய கணவர் சக்தி உறுதுணையாக நிற்கிறார். இன்று வீட்டில் குணசேகரனுக்கு எதிரே அமர்ந்து, அவருக்கு கடைசி வார்னிங் கொடுக்கிறார் ஜனனி.
இனிமேல் குடும்பத்திற்காக பார்த்தது எல்லாம் போதும். மன்னிப்பு கேட்டு திருந்தி விடுங்கள். இல்லையென்றால் மொத்த கொட்டத்தையும் அடக்கி விடுவேன் என்று துணிச்சலுடன் மல்லுக்கட்ட தயாராகி விட்டார் ஜனனி. இதைக் கேட்ட கதிர் ஜனனியை அடிக்க பாய்கிறார்.
அருகில் நின்ற சக்தி, கதிர் மீது பாய்ந்து, நெஞ்சில் மிதித்து அவர் மூக்கை உடைத்து விட்டார். அதுமட்டுமில்லாமல் அடி மேல அடி கொடுக்கிறார். இதனை சற்றும் எதிர்பாராத குணசேகரன் உள்ளுக்குள் வெடிக்கிறார். ஜனனி எடுக்க போகும் விஸ்வரூபத்தால் போர்க்கள பூமியாக மாறுகிறது எதிர்நீச்சல்.