Atlee : அட்லீ தமிழ் திரையுலகில் தனக்கென்ற ஒரு அங்கீகாரத்தை உருவாக்கி கொண்ட பேர்போன இயக்குனர். இவர் எடுத்தது ஒருசில படங்கள் என்றாலும் அனைத்தையுமே வெற்றி படங்களாகவே கொடுத்துள்ளார்.
ஒரு சிறிய இடைவெளிக்கு பின் இவர் இயக்க போகும் படம்தான் AA22xA6. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவா நடிக இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதரபாத்-ல் தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
AA22xA6 படத்தில் கேமியோ ரோலில் களமிறங்கும் டாப் நடிகர்..
இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயின்-ஆக நடிக்க உள்ளார். இந்த படத்தில் கோவை சரளா, யோகி பாபு ஆகியோரும் நடிக்கவுள்ளதாக தக்வல்கள் வெளியாகி வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் கேமியோ ரோலில் விஜய் சேதுபதி அவர்கள் நடிக்க இருப்பதாக செய்திகள் வலம் வருகின்றன. ஏற்கனேவே அட்லீ எடுத்த “ஜவான்” படத்திலும் விஜய் சேதுபதி நடித்தது குறிப்பிடத்தக்கது.
“விஜய் சேதுபதியை” லக்கி ஜாமாக நினைக்கிறார் போல அட்லீ. அதனாலதான் திரும்பவும் இவர் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதியை கேமியோ ரோலில் உள்ளே கொண்டு வருகிறார் என பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.
இடைவேளைக்கு பிறகு அட்லீ இயக்கும் படம் என்பதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அதுவும் அல்லு அர்ஜுன் நான்கு கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம், விஜய் சேதுபதியும் கேமியோ ரோலில், ஆகமொத்தம் படம் அட்டகாசமாக இருக்குமென திரை வட்டாரதத்தில் பேசிவருகிறார்களாம்.