Manikandan : நடிகர், இயக்குனர், என பன்முக தன்மை கொண்ட மணிகண்டனை பிடிக்காதவர்கள் இங்கு யாருமே இல்லை. இவர் நடித்த ஜெய்பீம் படம் இன்று வரை நீங்காத தாக்கத்தை அனைவர் மனதிலும் ஏற்படுத்தியுள்ளது.
இவர் நடித்த அத்துணை படைகளும் மக்களுக்கு பிடித்த படமாகவும், மக்களோடு சேர்ந்து பயணிக்கும் படமாவும் தன இருக்கிறது. என்னதான் டாப் நடிகர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும், மணிகண்டனின் எளிய நடிப்பிற்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருந்துகொண்டுதான் இருக்கின்றன.
டாப் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் மணிகண்டன்..
அந்தவகையில் மணிகண்டன் நடிப்பில் வெளிவந்த “good night” படம் மக்களிடையே பெரும்வரவேற்பை பெற்றது. இதற்கு அடுத்து வந்த “குடும்பஸ்தன்” படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.
இதற்கு அடுத்து மணிகண்டன் கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார். டாப் நடிகர்களுக்கே டப் கொடுக்கும் வகையில் படங்களை கைவசம் வைத்திருப்பது திரை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது.
பா ரஞ்சித் உதவி இயக்குனருடன் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார் மணிகண்டன். இதற்கடுத்து தியாகராஜன் குமாரராஜா என்ற இயக்குனர்களுடன் சற்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் மணிகண்டன் ஹீரோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொட்டுகாளி இயக்குனர் வினோத் ராஜ் மற்றும் தேசிங்கு பெரியசாமி ஆகிய இயக்குநர்களுடனும் படம் பண்ண போவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. மணிகண்டன் படம் என்றாலே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும், இதில் இவருடன் சேர்ந்து அத்துணை இயக்குனர்களும் ஹிட் படங்களை கொடுத்தவர்கள் அதனால் இந்த படங்களுக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்து உள்ளன.
விஜய், அஜித் இடத்திற்கு சிவகார்த்திகேயன் வரலாம் என்று பரபரப்பாக வேலைய செய்து கொண்டு இருக்கிறார் சிவா.இந்த வேளையில் எந்த பரபரப்பும் இல்லாமல் , அலுச்சாட்டியமும் இல்லாமல் தன் வேலைய செய்து கொண்டிருக்கிறார் மணிகண்டன். திடீரென டாப் நடிகராக இவர் உயர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.