Ayyanar thunai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலாவுக்கு சர்ப்ரைஸ் பண்ண வேண்டும் என்பதற்காக பாண்டியனை கூட்டிட்டு சோழன் பைக் வாங்க போய் விடுகிறார். அங்கே பைக்காரங்ககிட்ட பேரம் பேசி 25 ஆயிரம் ரூபாய்க்கு 10,000 பணத்தை கொடுத்து பைக்கை வாங்கிட்டு வந்து விடுகிறார்.
வந்ததும் நிலாவுக்கு சர்ப்ரைஸ் ஆக காட்ட வேண்டும் என்பதால் நிலாவின் கண்ணை மூடிக்கொண்டு சோழன் வெளியே கூட்டிட்டு வருகிறார். நிலா பைக்கை பார்த்ததும் சர்ப்ரைஸ் ஆகி பல்லவனிடம் இது உனக்கா என்று கேட்கிறார். பல்லவன் இல்லை என்று சொன்னதும் சேரனிடம், அப்படி என்றால் அண்ணன் இது உங்களுக்கா என்று கேட்கிறார்.
அதற்கு சோழன் யாருக்கும் இல்லை உங்களுக்கு தான் என்று சொல்லி ஆபீஸ்க்கு இதிலேயே போயிட்டு வாங்க என சொல்கிறார். இதைக் கேட்டதும் நிலா எனக்காகவா இந்த பைக் என்று ஆச்சரியமாக கேட்கிறார். அப்பொழுது சோழன் ஆமாம் என்று சொல்லி பைக் சாவியை கொடுக்கிறார். ஆனால் நிலா பைக் சாவியை வாங்காமல் யோசித்துக் கொண்டே இருக்கிறார்.
உடனே எல்லாரும் பைக் ஓட்டுங்க என்று சொல்லி வற்புறுத்தியதும் நிலா எனக்கு பைக் ஓட்டவே தெரியாது என்று சொல்கிறார். இதை கேட்டதும் சோழன் சிரித்து நக்கல் அடிக்கும் விதமாக பைக் கூட ஓட்ட தெரியாம தான் வாய் திருவண்ணாமலை வரை பேசினீங்களா. இதுல வேற கார் வாங்கி கோல்ட் காபி குடிச்சுக்கிட்டே வண்டி ஓட்டுவீங்க என்று சொன்னீங்க என நக்கல் அடிக்கிறார்.
இதை பார்த்து நிலா கடுப்பாகிவிட்டார், பிறகு இந்த சான்சை பயன்படுத்தி நிலாவுக்கு பைக் சொல்லிக் கொடுத்து ரொமான்ஸ் பண்ணலாம் என சோழன் முடிவு பண்ணி நானே உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன் என்று நிலாவே கூப்பிடுகிறார். ஆனால் நிலா நீங்க ஒன்னும் சொல்லிக் கொடுக்க வேண்டாம் பல்லவனே சொல்லிக் கொடுக்கட்டும் என்று பல்லவனை கூட்டிட்டு விளையாட்டு மைதானத்துக்கு போகிறார்.
அங்கே போனதும் பல்லவன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது சோழனிடம் நடேசன் சொன்னது என்னவென்றால் நீ என்னதான் பண்ணாலும் அவள் உன்னுடைய தங்கச்சியாக தான் இந்த வீட்டில் இருக்கிறாள். கூடிய சீக்கிரத்தில் இவங்க எல்லாருமே சேர்த்து நிலாவுக்கு வேற ஒரு இடத்தில் கல்யாணம் பண்ணி கொடுக்க போறாங்க.
நீ கடைசிவரை பார்த்து தான் இருக்க போற என சோழனிடம் சொல்லி சோழனை சீண்டி விடுகிறார். இதனால் சோழன் கோபப்பட்டு நிலா இருக்கும் இடத்திற்கு சென்று பல்லவனை கீழே இறங்கச் சொல்லி நான் சொல்லிக் கொடுக்கிறேன் என நிலாவுக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கிறார். அப்பொழுது நிலாவுக்கு சொல்லிக் கொடுக்கும் பொழுது நிலா பைக்கில் இருந்து கீழே விழுந்து நிலாவுக்கு அடிபட்டு விடுகிறது.