விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குமரவேலு ஜெயிலுக்கு போயிட்டு வந்த பிறகு டல்லாகவே இருக்கிறார். அதிலும் அரசியை காதலித்த விஷயத்தையும், செஞ்ச தவறையும் எண்ணி பார்க்கிறார். அந்த வகையில் கொஞ்சம் கொஞ்சமாக குமரவேலு திருந்திக் கொண்டு வருவது போல இருக்கிறது. குமரவேலுவின் நடவடிக்கைகளை பார்த்த ராஜி, அண்ணன் பாசத்தில் பீல் பண்ணி மீனாவிடம் சொல்கிறார்.
அடுத்து குமரவேலு தனியாக நிற்கும் பொழுது ராஜி பேசுகிறார். நான் எந்த சூழ்நிலையில் கதிரை கல்யாணம் பண்ணினேன். அந்த குடும்பம் எனக்கு எப்படி ஒரு உதவி செய்திருக்கிறது என்பதை புரிய வைக்கும் விதமாக குமரவேலுமிடம் பேசி நீ உனக்கான வாழ்க்கை வாழப் பாரு, நீ சந்தோஷமாக இருக்க வேண்டும். உன்னை நினைச்சு எனக்கு ரொம்பவே கவலையாக இருக்கிறது என்று அக்கறையாக பேசுகிறார்.
இதை கேட்ட சக்திவேல் உனக்கு அப்படி அக்கறையாக இருந்துச்சுன்னா உன் மாமனாரிடம் போய் குமரவேலு மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்க சொல்லு. சும்மா இங்க உட்கார்ந்து நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு இருப்பதை விட்டுவிடு என்று திட்டிவிட்டு போய்விடுகிறார். அடுத்ததாக தங்கமயில், அம்மா வீட்டுக்கு போனபொழுது வீட்டில் கணவனுடன் எந்த பிரச்சினை வந்தாலும் இங்கே வந்து விடாதே.
அங்கு இருந்து சமாளித்துக் கொள் என்று சொல்லிவிடுகிறார், உடனே தங்கமயில் சரவணனுக்கு ஃபோன் பண்ணி பார்க்கிறார். ஆனால் சரவணன் போன் எடுக்கவில்லை என்றது நேரடியாக கடைக்கு போய்விடுகிறார். அங்கே பாண்டியன், தங்கமயில் இடம் பேசிவிட்டு சரவணனை வீட்டில் போய் விட சொல்கிறார். ஆனால் சரவணன், தங்கமயில் மீது கோபமாக இருப்பதால் ஆட்டோவில் ஏற்றி விடுகிறார். இதனால் தங்கமயில் சரவணன் பேசவில்லை என்ற வருத்தத்தில் வீட்டுக்கு போகிறார்.