ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற கெட்டிமேளம் சீரியலில், மகேஷ் தன்னுடைய ரகசியத்தை தெரிந்து கொண்ட சிவராமனை கடத்தி முருகன் அம்மாவை அடைத்து வைத்தது போல் அடைத்து வைக்கணும் என்று பிளான் பண்ணினார். அதே நேரத்தில் முருகன் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் வகையில் மகேஷ் பல சதிகளை செய்தார்.
இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட சிவராமன், முருகனை காப்பாற்றி முருகனின் அம்மா உயிரோடுதான் இருக்கிறார் என்பதை சொல்லும் விதமாக முருகனை தேடி அலைந்தார். அந்த வகையில் மகேஷ் போனில் பேசிய விஷயத்தை கேள்விப்பட்ட சிவராமன் ரயில்வே டிராக்கில் உயிருக்கு போராடும் முருகனைக் காப்பாற்ற போனார்.
போன இடத்தில் முருகனை அந்த அடியாட்களிடம் காப்பாற்றி விட்டார், ஆனால் முருகன் கால் தண்டவாளத்தில் மாட்டிக் கொண்டதால் முருகனை காப்பாற்றுவதற்காக அவருடைய உயிரை பணயம் வைத்து முருகனை காப்பாற்றி விட்டார். இதனால் முருகன் கண் முன்னாடியே சிவராமன் உயிர் பரிதாபமாக போய்விட்டது.
பிறகு அங்கு இருக்கும் நபர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்து பொழுது முருகன் அங்கு இருப்பவர் மூலம் வெற்றிக்கு துளசிக்கும் போன் பண்ணி தகவலை சொல்லுகிறார். துளசி ஆஸ்பத்திரிக்கு போய் அப்பா நிலைமை பார்த்து நிலைகுலைந்து போய்விட்டார். உடனே அஞ்சலிக்கும் தகவலை சொல்லிய நிலையில் அஞ்சலி மகேஷிடம் சொல்லி அழுகிறார்.
ஆனால் இதற்கெல்லாம் காரணம் மகேஷ் தான் என்று அஞ்சலிக்கு இன்னும் தெரியவில்லை, மகேஷ் ஒரு தப்பை மறைக்க எக்கச்சக்கமான தவறுகளை செய்து தற்போது சிவராமன் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தி விட்டார். இந்த விஷயம் அஞ்சலி மற்றும் துளசிக்கு தெரிய வரும் பொழுது நிச்சயம் அதுதான் மகேஷின் இறுதி நாட்கள் ஆக இருக்கும்.