Vijay: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மதுரை மாநாட்டில் கிட்டத்தட்ட 35 நிமிடம் பேசி இருந்தார். இதில் அவர் முதலில் விஜயகாந்த் பற்றி பேசிதான் தன்னுடைய உரையை ஆரம்பித்து இருந்தார். அதாவது தன்னுடைய கட்சியின் மாநாட்டிற்காக மதுரையில் கால் வைத்த போது தனக்கு நினைவுக்கு வந்தது ஒருவர் தான்.
எம்ஜிஆர் – சினிமா மற்றும் அரசியலில் நிலையான இடம்
தமிழக சினிமா மற்றும் அரசியல் உலகில் எம்ஜிஆர் எப்போதும் மக்களின் மனதில் நிலைத்து நிற்பவர். அந்த பாதையில் மனிதநேய குணங்களை தாங்கி வந்தவர் விஜயகாந்த், எம்ஜிஆர் உடன் தனக்கு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
கேப்டன் விஜயகாந்தின் மனிதநேயம்
ஆனால் அண்ணன் விஜயகாந்த் உடன் பழகும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக தெரிவித்திருக்கிறார். நடிகர் விஜய்க்கு சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது செந்தூரப் பாண்டி திரைப்படம், இதில் விஜய்க்கு அண்ணனாக சம்பளமே வாங்காமல் விஜயகாந்த் நடித்திருப்பார்.
விஜயின் உருக்கமான பாராட்டு
அரசியலில் தனக்கான புதிய பாதையை தேர்ந்தெடுத்து இருக்கும் விஜய், விஜயகாந்தை நினைவு கூர்ந்து இருக்கிறார். இது அவருடைய ரசிகர்களுக்கும், தமிழகம் மக்களுக்கும் மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
மேலும் எம்ஜிஆரின் எதிர்காலம் வரும், என் கடமை வரும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்பேன் என்ற பாடல் வரிகளை பாடி காலையிலிருந்து சுட்டெரிக்கும் வெயிலில் தவித்துக் கொண்டிருந்த தன்னுடைய தொண்டர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.
முடிவுரை
தமிழ் சினிமா மற்றும் தமிழக அரசியலில் என்றுமே எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்தின் பெயர்கள் நிலைத்து நிற்கும். அந்த இருவரையும் தன்னுடைய மாநாட்டு பேச்சில் விஜய் குறிப்பிட்டு இருப்பது அவர்கள் மீதான அவருடைய மரியாதையை தான் தெரியப்படுத்துகிறது.