Sirakadikkum asai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவதும், முத்து மீனா தத்தியாக ஏமாறுவதும் தான் வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் இன்றும் ரோகினியின் அம்மாவை பார்த்த மீனா, குழப்பத்துடன் வீட்டில் வந்து சில விஷயங்களை சொல்கிறார். ஆனால் முத்து, அப்படி என்ன ரகசியத்தை மறைத்திருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கலாம் என்று சொல்லி போய்விடுகிறார்.
இவர்கள் ஏமாறுவதும் ரோகிணி ஏமாற்றுவதும் தான் இந்த நாடகத்தின் கதையாகவே இருக்கிறது. இதில் புதுசா சீதாவின் கணவர் அருணும் சேர்ந்திருக்கிறார். முத்துவை ஆரம்பத்திலிருந்து அருணுக்கு பிடிக்கவே இல்லை. ஆனால் சீதாவை கல்யாணம் பண்ண பிறகும் அதே கோபத்துடன் இருப்பதால் கிடைக்கும் சந்தர்ப்பத்தை எல்லாம் பயன்படுத்தி முத்துவை மட்டம் தட்டி வருகிறார்.
அந்த வகையில் முத்துவின் நண்பர் செல்வத்தை வைத்து புதுசாக கேம் விளையாட ஆரம்பித்து விட்டார். அவரை அடித்து அவமானப்படுத்தியது மட்டுமில்லாமல் சீதாவிடம் வேறு விதமாக சொல்லி ஏமாற்றி விட்டார். அதையும் சீதா நம்பியதால் அருணுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக பேசுகிறார். இந்த விஷயம் செல்வத்தின் நண்பர்கள் மூலம் முத்துக்கு தெரிய வருகிறது.
உடனே கோவப்பட்ட முத்து, சீதாவை சந்தித்து எப்பொழுது அருண் உன்னை கல்யாணம் பண்ணினானோ, அப்பொழுதே இருக்க கோபத்தையும் பகையும் மறந்து சாதாரணமாக இருக்கிறேன். ஆனாலும் பலமுறை உன் வீட்டுக்காரர் என்னை சீண்டி பார்த்தார். எதையும் பொருட்படுத்தாமல் இருந்தேன், ஆனால் அதற்காக என் நண்பர்களை சீண்ட நினைத்தால் நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன் என்று கோபமாக பேசி விடுகிறார்.
அருண் டபுள் கேம் ஆடுகிறார் என்பதை புரிந்து கொள்ளாமல் சீதாவும் அருணை கண்மூடித்தனமாக நம்புகிறார். அடுத்ததாக ரவி ஹோட்டலில் வேலை பார்க்கும் பொழுது ரவுடிகள் வந்து பிரச்சினை பண்ணுகிறார்கள். இதனை சமாளிக்க முடியாத ரவி, முத்துவுக்கு போன் பண்ணி ஹோட்டலுக்கு வர சொல்கிறார். முத்துவும் ரவுடித்தனத்தை காட்டும் விதமாக அந்த ஆட்களிடம் பிரச்சனை பண்ணுகிறார்.
பிறகு அவர்களை முத்து அடித்த பொழுது அந்த ஆட்கள் சுருதியின் அம்மா சொல்லி தான் இங்கே வந்து பிரச்சினை பண்ணுகிறோம் என்று சொல்லிவிடுகிறார். அதாவது ரவி, சுருதி ஆரம்பிக்கப் போகும் ஹோட்டலுக்கு வேலைக்கு போக வேண்டும் என்பதால் இந்த மாதிரி சூழ்ச்சி எல்லாம் செய்கிறார்.
இதை தெரிந்து கொண்ட பிறகு ரவி நிச்சயம் சுருதியிடம் கேட்டு சண்டை போட போகிறார். ஆனால் சுருதி வழக்கம் போல் எங்க அம்மா அப்படி பண்ணினாங்க என்றால் நீ எங்க அம்மா கிட்ட போய் கேளு என்று சொல்லி எஸ்கேப் ஆகி விடுவார்.