Vijay: மதுரையில் நடந்த தனது மாநாட்டில், நடிகர்-அரசியல்வாதி விஜய் பேசிய வார்த்தைகள் இப்போ தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதம் ஆக மாறியிருக்கிறது. “எங்க ஒரே கொள்கை எதிரி பாஜக தான்”ன்னு அவர் சொல்லி இருக்கிறார்.
பாஜக தான் முக்கிய எதிரி என்று சொன்ன விஜய்
திமுக, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரி என விஜய் யாரை பற்றியும் பேசவில்லை. நேரடியாக பாஜகவையே குறிவைத்து விஜய் பேசினார். அதிலேயே அவர் எதிர்கால அரசியல் திசை என்னன்னு சொல்ற மாதிரி ஒரு சிக்னல் கொடுத்து இருக்கிறார் என்பது தெரிகிறது. இப்போ மக்களின் கேள்வி, பாஜகவை எதிரியாகக் காட்டுறவர், எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்பது தான்.
திமுக கூட்டணிக்கு விஜய்யின் எச்சரிக்கை
விஜய் பேச்சுல இன்னொரு முக்கியமான பாயிண்ட்டையும் சொல்லி இருந்தார். “திமுக தன்னோட கூட்டணி கட்சிகளையே நம்பிட்டு, தேர்தலில் ஜெயிச்சிடலாம் என்று கனவு காணாதீங்க”ன்னு அவர் சொல்லி இருக்கிறார். அதாவது, திமுகக்கு அடுத்த பெரிய சக்தி தான்தான் என்று விஜய் நம்பிக்கையோட வெளிப்படுத்துறார் என்பதும், கூட்டணி கட்சிகள் தவெக உடன் வர வாய்ப்பிருப்பதையும் சூசகமாக சொல்வது தெரிகிறது.
காங்கிரஸ் தான் விஜய்யின் அடுத்த கூட்டணி?
திமுக கூட்டணியிலேயே இருக்குற காங்கிரஸ், எப்போதும் பாஜகவுக்கு எதிரி. விஜய்யும் அதே லைன்ல பாஜகவையே எதிரி என்று வெளிப்படையாகச் சொல்றாரு. அப்படியிருக்க, திமுகவோடு கைகோர்க்காமல், காங்கிரஸோடு மட்டும் கை கோர்க்கும் சாத்தியம் இருக்குமோன்னு அரசியல் வட்டாரத்தில பேச்சு தீவிரமா இருக்கு.
“விஜய் தனியா போனா, பாஜக எதிர்ப்பில் வெற்றியடைய கஷ்டம். ஆனா காங்கிரஸோட சேர்ந்தா, பாஜக எதிர்ப்பு வாக்கு தன்னோட பக்கம் வலுவா திரும்பும்” என்பது நிதர்சனமான உண்மை. அதே நேரம், விஜய், காங்கிரஸ் கூட்டணி, திமுகக்கும், அதிமுகக்கும் பெரும் தலைவலியை தரவும், அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது.
ரசிகர்களும் ஆதரவாளர்களும் உற்சாகத்தில்
விஜய் மதுரை மாநாட்டில் பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. தைரியமாக தன்னுடைய எதிரி திமுக தான், 2026 இல் அந்த கட்சியை வெல்வேன் என சூளுரைத்திருப்பது அவருடைய தொண்டர்களுக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
முடிவுரை
பாஜகவுக்கு எதிரி விஜய், திமுக கூட்டணியை நம்பாத விஜய் , அப்படியிருக்க, காங்கிரஸோட கூட்டணி தான் அவரின் அடுத்த அத்தியாயமா? அடுத்த சில மாதங்களில் விஜயின் அரசியல் அட்டகாசம் என்னன்னு எல்லோரும் பொறுத்திருந்து பார்ப்போம்.