படம் தயாரிக்கலாம் என ஆசைப்பட்டு புதிதாய் அமெரிக்காவில் இருந்து தமிழ் சினிமா பக்கம் வந்தது ஒரு தயாரிப்பு நிறுவனம். சுமார் 40 முதல் 50 கோடிகளை இறக்கி ஆரம்பத்தில் அசால்டாக என்டரி கொடுத்தார்கள் அதற்குப் பின்னர் நடந்தது தான் சோகத்திலும் சோகமாய் இருக்கிறது.
அமெரிக்க நிறுவனமான பி டி ஜி யூனிவர்ஸ் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானது. முதல் படமே அஜய் ஞானமுத்துவின் இயக்கத்தில் உருவான டிமான்டி காலனி 2 படத்தை தயாரித்தார்கள். முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து மிரண்டு இதை கையில் எடுத்தனர்.
இந்த படம் அவர்களுக்கு முதலுக்கு மோசமாய் அமையவில்லை. இதனால் அடுத்த படமான சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் என்ற படத்தை தயாரித்தார்கள். இது ஒரு காமெடி படமாக வெளிவந்தது. வைபவ், அதுல்யா ரவி, ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், மொட்ட ராஜேந்தர், ரெட்டின் கிங்ஸ்லீ என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள்.
இந்த படம் அவர்களுக்கு பெரும் நஷ்டத்தை விளைவித்தது. 50 கோடிகளை இறக்கி அவர்களுக்கு இந்த சினிமா ஒரு பைசா கூட ரிட்டன் லாபத்தை கொடுக்கவில்லை. இருந்தபோதிலும் அவர்கள் மூன்றாவதாக அருண் விஜய் நடித்த ரெட்ட தல படத்தை தயாரித்துள்ளனர். இருவருமே இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார்கள்
இந்த படம் இப்பொழுது ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இது அவர்களுக்கு கை கொடுத்தால் அடுத்தடுத்து படங்கள் தயாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஹீரோயினாக சித்தி இதானி நடித்துள்ளார்.