Mahanadhi serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய் வீட்டை விட்டு கிளம்பியதும் இதுதான் சான்ஸ் என்று விஜயின் பாட்டியும் சித்தியும் காவிரி வீட்டிற்கு போயிட்டு விவாகரத்து கேட்கிறார்கள். அதற்கு காவேரி கொடுக்க முடியாது என்று சொன்னதும் விஜய்யின் பாட்டி, வாய்க்கு வந்தபடி பேசி காசு பணத்துக்காக தான் என் பேரனுடன் இருக்கிறியா?
உங்களுக்கு அந்த பணத்தை நான் தருகிறேன் என்று அவமானப்படுத்தி பேசி விட்டார். இதை கேட்டதும் சாரதா இந்த பேச்செல்லாம் நமக்கு தேவையா அவங்க கேட்டபடி கையெழுத்து போட்டு கொடு என்று சாரதா, காவிரியை திட்டுகிறார். ஆனால் காவேரி என்ன பண்ணுவது என்று தெரியாமல் யோசித்த நிலையில் விஜய் முதலில் கையெழுத்து போடட்டும்.
அதன் பிறகு நான் கையெழுத்து போட்டு தருகிறேன் என்று சொல்லி அனுப்பி விடுகிறார். பிறகு நவீன் விஜய்க்கு போன் பண்ணி காவிரியிடம் பேசுங்கள் என்று போனை கொடுக்கும் போது விஜய் பேச விருப்பமில்லை என்று கட் பண்ணி விடுகிறார். இதனால் காவேரி, விஜய்க்கு ஃபோன் பண்ணிக் கொண்டே இருக்கிறார்.
ஆனால் விஜய் போன் எடுக்கவில்லை பிறகு விஜய் போன் பண்ணும் பொழுது சாரதா, காவேரி ஃபோனை புடுங்கிவிட்டு பேசக்கூடாது என்று பிரச்சினை பண்ணுகிறார். ஆனாலும் நீ இவ்ளோ பிடிவாதமாக இருப்பதற்கு என்ன காரணம் என்று சாரதா, காவிரியிடம் கேட்டு சண்டை போடுகிறார்.
உடனே காவிரி நான் வெறும் ஒப்பந்தத்தின் படி மட்டுமே விஜயின் மனைவியாக வாழவில்லை. நாங்கள் இருவரும் மனசார காதலித்தோம், கணவன் மனைவியாக வாழவும் ஆரம்பித்தோம். அதனால் இப்பொழுது நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று காவிரி உண்மையை சொல்லி விடுகிறார்.
இதைக் கேட்டதும் காவிரி குடும்பத்தில் இருப்பவர்கள் அதிர்ச்சியாகி நிற்கிறார்கள். இந்த விஷயத்தை தெரிந்த பிறகு இனி சாரதா, விஜய்யிடம் இருந்து காவிரியை பிரிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார். அதனால் யார் தடுத்தாலும் இனி சாரதா தான் விஜய்யும் காவிரியையும் சேர்த்து வைப்பார்.