sirakadikkum asai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கு ஆசை சீரியலில் ரோகினி, க்ரிஷ் விஷயத்தை யோசித்து டென்ஷனாக இருக்கிறார். அப்பொழுது மனோஜ் என்னாச்சு என்று கேட்ட நிலையில் தலைவலி என்று சொல்லியதும் மனோஜ் வீட்டிற்குள் இருக்கும் தைலத்தை தேடி எடுத்து கொடுக்கப் போகிறார். உடனே விஜயா, நீ ஏன் எடுத்துக் கொடுக்கணும். அவள் என்ன பெரிய மகராணியா என்று சொல்லி ரோகிணியை கூப்பிட்டு திட்டுகிறார்.
உடனே ரோகிணி நான் உன்னிடம் ஏதாவது கேட்டனா ஏன் தேவையில்லாமல் எனக்கு உங்க அம்மாவிடம் திட்டு வாங்கி கொடுக்கிறாய் என்று திட்டி விட்டு போய்விடுகிறார். அடுத்ததாக ரவி ஹோட்டலில் பிரச்சினை பண்ணும் ரவுடியாக்களை சரி செய்யும் விதமாக முத்து வந்து பிரச்சினையை சமாளிக்கிறார்.
அப்பொழுதுதான் தெரிகிறது, அது சுருதி அம்மா ஏற்பாடு பண்ண விஷயம் என்று. இதை கேட்டதும் கோபப்பட்ட ரவி வீட்டுக்கு வந்து சுருதியிடம் சண்டை போடுகிறார். அதற்கு சுருதி, எதுவும் பண்ணவில்லை அம்மா பண்ணியதற்கு நான் என்ன பண்ணுவேன் என்ற ஆசார்ட்டாக கேள்வி கேட்கிறார். அப்பொழுது மீனா என்ன இருந்தாலும் உங்க அம்மா பண்ணுனது தவறுதான்.
நீங்கள் தான் உங்க அம்மாவிடம் சொல்லி புரிய வைக்க வேண்டும், இல்லை என்றால் ரவி வேலை பார்க்கும் ஹோட்டலில் பிரச்சனை ரவிக்கு தானே வரும் என்று சொல்லியதும் சுருதி, ஓகே நான் எங்க அம்மாவிடம் பேசி இந்த மாதிரி விஷயத்தை பண்ண வேண்டாம் என்று சொல்லி வைக்கிறேன் என போய்விடுகிறார்.
அடுத்ததாக மனோஜ் ஷோரூம் இல் இருக்கும் பொழுது மனோஜின் முன்னாள் தோழர் ஒருவர் வந்து க்ரிஷ் படிக்கும் போர்டிங் ஸ்கூலின் நிர்வாகியை கூட்டிட்டு வந்து ஸ்கூலுக்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று சொல்கிறார். அப்பொழுது மனோஜ் அவரிடம் பேசி பொருட்களை கொடுக்கிறார்.
மனோஜ் பேச்சை கேட்டதும் நீங்கள் எங்களுடைய ஸ்கூலுக்கு வந்து மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுக்கணும் என்று சொல்லுகிறார். மனோஜும் இதற்கு ஆசைப்பட்டு வீட்டிற்கு வந்து எப்படி பேச வேண்டும் என்றெல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்லிப் பார்க்கிறார். மனோஜின் செல்களை பார்த்து அனைவரும் கிண்டல் அடித்து பிடித்துக் கொள்கிறார்கள். அப்படி மனோஜ் அந்த ஸ்கூலுக்கு போகும் பொழுது கிரிசை பார்ப்பார். அத்துடன் வீட்டிற்கு வந்து முத்து மீனாவிடம் சொல்வார்.