Pandian stores 2 serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி டியூஷன் எடுக்கும் வீட்டில் ஒருவர் பைனான்ஸ் கொடுப்பதை தெரிந்து கொண்டு கதிர்காக பைனான்ஸ் கொடுக்க முடியுமா என்று உதவி கேட்கிறார். அவங்களும் ராஜி கேட்டவுடன் சரி என்று சொல்லியதால் கதிர் பிசினஸுக்கு உதவி கிடைத்துவிட்டது என்று ராஜி சந்தோஷப்படுகிறார்.
இந்த விஷயத்தை கதிரிடம் சொல்லி இப்பொழுது நீ ஏன் எனக்காக ரொம்ப கஷ்டப்படுகிறாய். நீ எனக்கு ஒன்னும் பண்ண வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு ராஜி எனக்கு மட்டும் நீ எல்லா விஷயத்தையும் செய்கிறாய். நான் அதை ஏற்றுக்கொள்ளனும் நான் ஒன்னு சொல்லும் போது மட்டும் நீ அதை மறுத்து விடுவியா என்று செல்லமாக இருவரும் சண்டை போட்டு பேசிக்கொள்கிறார்கள்.
அடுத்ததாக தங்கமயில் இனி நமக்காக யாரும் இல்லை, நம்மளுடைய வாழ்க்கை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து வீட்டிற்கு வருகிறார். வந்ததும் சில வேலைகளை முடித்துவிட்டு அசதியாக இருக்கிறது என்று உட்கார்ந்து இருக்கிறார். அப்பொழுது வேலை முடித்து விட்டு மீனாவும் வீட்டுக்கு வருகிறார். அந்த நேரத்தில் கோமதி கர்ப்பமாகவே இல்லை ஆனாலும் நான் சேவை செய்து இருக்கிறேன்.
இப்ப என்ன உனக்கு அசதி என்று தங்கமயிலை நோகடித்து பேசி மாமியார் புத்தியை கோமதி காட்டிவிடுகிறார். இதை கேட்டதும் தங்கமயில் எதுவும் பேச முடியாமல் பீலிங்ஸ் ஓட அமைதியாக போய்விடுகிறார். மீனா ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டதும் கோமதி அதற்கும் மீனாவிடம் சண்டை போட்டு போய்விடுகிறார். பிறகு சுகன்யா பழனிவேலுவை கூப்பிட்டு ஒரு வரவேற்பு நிகழ்ச்சிக்கு போயிட்டு வருகிறார்.
போயிட்டு வரும் பொழுது அவருடைய முன்னாள் கணவரை பார்த்து பயந்து நடுங்கி பழனிவேல் இடம் இந்த வழியாக போக வேண்டாம். வேறு வழியாக கூட்டிட்டு போங்க என்று கெஞ்சுகிறார். உடனே பழனிவேலு கூட்டிட்டு போயிட்டு என்ன ஆச்சு என்ன பிரச்சனையை அவனைப் பார்த்து நீ ஏன் பயப்படுகிறாய் என்று கேட்கிறார்.
அதற்கு சுகன்யா அவன் தான் என்னுடைய முதல் கணவன் என்னை அந்த அளவுக்கு கொடுமைப்படுத்தி இருக்கிறான். அவனிடம் அனுபவிக்காத டார்ச்சரே இல்லை, அவன் ஒரு சைக்கோ என்று வைத்து பயத்துடன் சொல்கிறார். உடனே பழனிவேலு இப்போ அந்த பயம் உனக்கு தேவையில்லை, நீ ஒன்னும் தனியாள் இல்லை நான் இருக்கிறேன். பயப்படாம வா என்று ஆறுதல் படுத்தி சுகன்யாவை வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார்.