செப்டம்பர் மாதம் தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாதமாக மாறியுள்ளது. ஏனெனில் ஒரே மாதத்தில் பல பெரிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. குறிப்பாக செப்டம்பர் 5 மற்றும் 12 ஆம் தேதி வெளியான படங்களுக்கான அதிகாரப்பூர்வ தணிக்கை அறிக்கை குழுவின் தீர்ப்பு தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
முதலில், செப்டம்பர் 5 அன்று வெளியாக இருக்கும் “மதராஸி” படம் குறித்து ரசிகர்களிடம் இருந்த எதிர்பார்ப்பு மிகுந்தது. ஆனால், அதிகாரப்பூர்வ முடிவில் “மதராஸி – தோல்வி” என வெளிவந்துள்ளது. இதனால் அந்த படக்குழுவும் ரசிகர்களும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
ஆனால் அதே நாளில் வெளிவர இருக்கும் “காதி” படம் சிறந்த கதைக்களம், ஹீரோவின் நடிப்பு ஆகியவை படத்தை உயர்த்தியுள்ளது. அதனால் தான் அதிகாரப்பூர்வமாக இந்த படத்திற்கு “பிளாக்பஸ்டர்” பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இது அந்த படக்குழுவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி.
அடுத்து, செப்டம்பர் 12 அன்று ரிலீஸ் ஆக இருக்கும் “காந்தா” படம் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. மிகுந்த உணர்ச்சி, ஆழமான கதை, குடும்பம் சார்ந்த உணர்வுகள், அதிரடி மற்றும் திரில்லர் கலந்த காட்சிகள் அனைத்தும் சேர்ந்து “காந்தா” படத்தை அதிகாரப்பூர்வ அறிக்கையில் “டபுள் பிளாக்பஸ்டர்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரிய அளவில் கருத்துக்கள் பரவுகின்றன. “மதராசி” படத்தை எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்தாலும், “காதி” மற்றும் “காந்தா”படத்தால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். குறிப்பாக, காந்தா படத்திற்கு கிடைத்த டபுள் பிளாக்பஸ்டர் டேக், அந்த படத்தை ஆண்டு முழுவதும் பேசப்படும் படங்களின் வரிசையில் சேர்த்துவிட்டது.
இதனால், செப்டம்பர் மாதம் தமிழ் சினிமாவின் வரலாற்றில் மறக்க முடியாத மாதமாக உள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் வரும் படங்கள் இந்த வெற்றியை மீறி சாதிக்குமா என்பதை பார்க்கலாம்.