2025ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார் சஞ்சு சாம்சன். பவர் ஹிட்டர்களில் ஒருவரான இவர் 20 ஓவர் போட்டியில் மட்டும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். ஆசிய கோப்பை தொடரானது தற்போது 20 ஓவர் போட்டிகளாக விளையாடி வருகிறார்கள்.
இந்த தொடரில் இந்திய அணியில் ஓப்பனாராக இறங்க உள்ளார் இந்த காட்டடி கண்ணாயிரம். அடுத்த மாதம் 9 ஆம் தேதி ஆசிய கோப்பை தொடர் தொடங்க உள்ளது. 28ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்தியா இதில் பாகிஸ்தான், ஓமன், UAE போன்ற அணிகளுடன் லீக் போட்டியில் விளையாடுகிறது.
தற்சமயம் கேரளாவில், கேரளா கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடி வருகிறார் சஞ்சு சாம்சன். இதில் அவர் கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அங்கே தான் 50 பந்துகளில் பேயாட்டம் ஆடியுள்ளார்.
முதலில் விளையாடிய கொல்லம் செய்லர்ஸ் அணி 20 ஓவர் முடியில் 236 ரன்கள் அடித்துள்ளது. இந்த இமாலய இலக்கை சஞ்சு சாம்சன் அதிரடியால் எளிதாக விரட்டி வெற்றி பெற்றுள்ளனர். கடைசி பந்தில் அந்த அணி வீரர் முகமது ஆசிக் சிக்சர் மூலம் வெற்றியை உறுதி செய்தார்.
சஞ்சு சாம்சன் வெறும் 16 பந்துகளில் 50 ரன்கள் அடித்த அவர் 42 பந்திகளில் நூறு ரண்களை கடந்தார். தொடர்ச்சியாக அபாரமாக ஆடியவர் 51 பந்துகளில் மொத்தமாய் 14 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 121 ரன்கள் குவித்தார். இப்பவே ஆசிய கோப்பைக்கு ரெடியென காலரை தூக்கி விட்டுள்ளார்.