ethirneechal 2 serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், ஈஸ்வரிக்கு வந்த பிரச்சனைக்குப் பின்னால் குணசேகரன் தான் ஏதோ ஒரு அக்கிரமம் பண்ணித் தர என்று ஜனனிக்கு நன்றாகவே தெரிகிறது. ஆனால் அதற்கு தகுந்த ஆதாரமும் கிடைக்கவில்லை மொத்த பணியும் தன் மீது விழுந்து விட்டது என்ற விஷயத்திற்காக ஜனனி பொறுமையாக டீல் பண்ணி வருகிறார்.
அந்த வகையில் ஈஸ்வரி காயம் அடைந்ததற்கு பின்னால் அறிவுக்கரசிக்கும் ஏதோ ஒரு உண்மை தெரியும் என்று ஜனனி நினைக்கிறார். ஏற்கனவே ஈஸ்வரி தன்னுடைய உயிருக்கு குணசேகரன் ஆபத்து இருக்கிறது என்ற வீடியோவை ஜீவானந்தத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார். அதனால் நிச்சயம் குணசேகனை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்ற ஆதாரத்தை தேட ஆரம்பிக்கிறார்.
ஆனால் கையில் வெண்ணெய் வைத்து நெய்யிக்கு அலைந்த கதையாக ஜீவானந்தத்திற்கு ஈஸ்வரி அனுப்பின வாக்குமூலமே போதும் குணசேகரன் ஜெயிலுக்கு போவதற்கு. ஆனால் அதை வைத்து எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் அறிவுக்கரசிடம் இருக்கும் ஆதாரத்தை எடுக்க வேண்டும் என்று ஜனனி முயற்சி எடுக்கிறார். அந்த வகையில் நந்தினி மூலம் ஜனனி கைக்கு அறிவுக்கரசி போன் கிடைத்துவிட்டது.
ஆனால் அறிவு அந்த போனை பார்க்க விடாமல் பிடுங்கி விடுகிறார். இருந்தாலும் ஜனனிக்கு அறிவு கண்ணில் தெரிந்த பயத்தை வைத்துக்கொண்டு நிச்சயம் அறிவுக்கும் இதுக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது என்று முடிவெடுத்துவிட்டார். அதனால் எப்படியும் ஜனனி அந்த ஆதாரத்தை எடுத்து விடுவார். ஆனால் அதற்குள் அறிவு இந்த ஆதாரத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் யாரிடம் கொடுத்து பாதுகாக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்.
அதனால் ஆதாரத்தை மறைக்க வேண்டும் என்பதற்காக அன்புவிடம் கொடுப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வளவு நடந்த பிரச்சனையில் தர்ஷன் நிலைமையே எல்லோரும் மறந்து விட்டார்கள். தர்ஷன் கொஞ்சம் கொஞ்சமாக அவனை மறந்து கொண்டு அறிவுக்கரசி ஆட்டி வைக்கும் பொம்மையாக மாறிக் கொண்டு வருகிறார். ஆனால் அதற்குள் சுயநினைவு இழந்து கோமா ஸ்டேஜில் இருக்கும் ஈஸ்வரி உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் பாதுகாப்பாக வந்து விடுவார்.