Vikram: தமிழ் சினிமாவின் மாஸ்டர் ஆர்டிஸ்ட் விக்ரம், 2022–23 காலப்பகுதியில் பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் வெற்றியால் மீண்டும் ஒரு உயர்வு கண்டார். ஆனால் 2024–25-இல் மீண்டும் ஒரு பின்னடைவு– அதுவும் தங்கலான் மற்றும் வீர தீர சூரன் 2, படங்களில் நிலைமை என்ன ஆகியது?
தங்கலான் 15 ஆகஸ்ட் 2024, சுதந்திர தின விழா அன்று இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்தது. இப்படம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்ற மாதிரி விக்ரமும் தரமான நடிப்பை கொடுத்தார். ஆனாலும் விமர்சனத்தில் வெகுவாக சரிந்தது. அதனால் வசூலில் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு தோல்வியுற்றது . சுமார் ₹72 கோடி மட்டுமே என்று வசூல் கிடைத்தது.
அதே போல வீரதீர சூரன் 2, இந்த ஆண்டு 27 ஆம் தேதி மார்ச் மாதத்தில் வெளிவந்தது. விக்ரமின் கடுமையான முயற்சியை கொடுத்து பாராட்டும் வகையில் விக்ரமின் நடிப்பு, பாரம்பரிய சண்டைகள் பாராட்டியபோதிலும், வசூலில் வருகை குறைவு தான். அந்த வகையில் கொஞ்சம் கூட லாபம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ₹66 கோடி மட்டுமே வசூலானது.
இதனால் விக்ரமின் ரசிகர்கள் மிகவும் மன வருத்தத்திற்கு ஆளானார்கள். இருந்தாலும் திறமை ஆனவர்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விக்ரமின் அடுத்த படத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இப்ப வந்திருக்கும் தகவலின்படி விக்ரம் நடிக்க இருந்த இரண்டு படங்களும் கேள்விக்குறியாக இருக்கிறது.
அதாவது இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். ஆனால் சில காரணங்களால் இப்படம் ட்ராப் ஆகிவிட்டது. இதனை அடுத்து ஐசரி கணேஷ் இயக்கத்தில் 96 படத்தின் இயக்குனர் பிரேம் கூட கூட்டணி வைப்பதற்கு பேச்சுவார்த்தைகள் வைக்கப்பட்டது. இதற்கு விக்கிரமும் சம்மதித்த நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேசன், விக்ரமுக்கு தங்க செயின் கொடுத்து கௌரவித்தார்.
ஆனால் தற்போது இயக்குனர் எழுதிய கதை மீது பெரிதளவில் நாட்டம் இல்லாததால் இரண்டு மூன்று தடவை வேறு ஒரு கதை கொண்டு வாருங்கள் என்று விக்ரம் அவரை திருப்பி அனுப்பி கொண்டே இருக்கிறார். இதனால் இயக்குனர் என்ன பண்ணுவது என்று தெரியாமல் அப்படியே இந்த கதையை தாமதத்தில் வைத்திருக்கிறார். அந்த வகையில் இப்போது வரை விக்ரம் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் கேரியரில் பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறார்.