Dhanush: தமிழ் சினிமாவின் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது நடிகர் தனுஷ் மற்றும் அவரது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையேயான உறவு.
2004-ஆம் ஆண்டு இருவரும் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால், 2021 இல் 17 வருட திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு சட்டப்படி விவாகரத்து முடிந்தது. இந்தச் சம்பவம், ரஜினிகாந்த் குடும்பத்தையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
விவாகரத்துக்குப் பிறகு தனுஷ் தனது தொழிலில் பிசியாக இருந்தாலும், பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் உடன் அவர் தொடர்பில் இருக்கிறார் எனக் கூறிய செய்தி மீண்டும் சர்ச்சையை கிளப்பியது. இதேவேளை, ஐஸ்வர்யாவும் தனது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆனால், மகள் விவாகரத்தால் வருத்தமடைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்காவின் எதிர்காலத்தை பற்றியே அதிகம் கவலைப்படுகிறார் எனக் கூறப்படுகிறது.
என்ன தான் நடக்குது போயஸ் கார்டன் வீட்டில்?
சமீபத்தில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா மகன்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து ‘கூலி’ படத்தை திரையரங்கில் பார்த்ததாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்தன. இதை பார்த்த ரசிகர்கள், “அம்மா அப்பா பிரிந்தாலும், குழந்தைகளுக்காக இணைந்து நிற்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம்” என்று கருத்து தெரிவித்தனர்.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது:
“மகன்களின் விருப்பத்திற்காக தனுஷ், ஐஸ்வர்யா மீண்டும் இணைந்து வாழ முடிவு செய்து இருக்கலாம். அதனால்தான் அவர்கள் பொதுவெளியில் குழந்தைகளுடன் தோன்றுகிறார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
இப்போதைக்கு சட்டரீதியாக இருவரும் விவாகரத்து செய்துவிட்டார்கள். ஆனால், மகன்களுக்காக அவர்கள் மீண்டும் சேரும் வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.
விவாகரத்து ஆன பின்னரும், மகன்களுக்காக பெற்றோர் ஒன்றிணைவது சமூகத்தில் நல்ல முன்னுதாரணமாக இருக்கும். ஆனால் உண்மையில் தனுஷ்–ஐஸ்வர்யா மீண்டும் இணைவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.