தளபதி விஜய்யின் லைஃப் பார்ட்னர் சங்கீதா எவ்வளவு பணக்காரர் தெரியுமா?
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல், அரசியலிலும் தன்னுடைய தனித்துவத்தை உருவாக்கி வருகிறார். இவரது கடைசி படம் “ஜனநாயகன்” வெளியாகவுள்ளது. அரசியல் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில், விஜய் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவரது மனைவி சங்கீதாவை பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, விஜய் மற்றும் சங்கீதா பிரிந்துவிட்டார்கள் என்ற வதந்திகள் பரவி வந்தது. ஆனால், உண்மையில் சங்கீதா தன் மகளின் கல்விக்காக வெளிநாட்டில் தங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இருந்த குழப்பம் ஓரளவு தெளிவானது.
இந்நிலையில், சங்கீதாவின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளி வந்துள்ளது. இலங்கை பிறப்பிடமாகக் கொண்ட லண்டன் தொழிலதிபரின் மகளான சங்கீதா, விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்தார். பின்னர் நட்பாக மாறி இறுதியில் திருமணமாகியது என்பது அனைவருக்கும் தெரிந்த தகவல்.
சங்கீதாவின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ. 400 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இது கேட்டு ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். லண்டனில் மட்டுமின்றி, இந்தியாவில் சங்கீதாவுக்கு பல்வேறு முதலீடுகள் மற்றும் சொத்துக்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் விஜய் பங்கேற்று உரையாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இப்படியான அரசியல் செயல்பாடுகளுக்கு இடையில், அவரது குடும்பத்தை பற்றிய தகவல்கள் ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
சங்கீதாவின் சொத்து விவரம், விஜய் குடும்பத்தின் பிரம்மாண்டத்தையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் வெளிப்படுத்துகிறது. இதனால், ரசிகர்கள் “திரை உலகிலும், அரசியலிலும் விஜய் வெற்றி பெற, குடும்பத்தில் வலிமையான ஆதரவு உள்ளது” என்று கூறி வருகின்றனர்