Logesh kanagaraj : தமிழ் சினிமாவின் செல்வாக்கு மிகுந்த இயக்குநர்களில் ஒருவராக கருதப்படும் லோகேஷ் கானகராஜ், தனது அடுத்த படமான ‘கூலி’ க்காக 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகச் செய்திகள் பரவி வருகின்றன. தமிழ் சினிமா வரலாற்றில் நடிகர்களுக்கு மட்டுமின்றி இயக்குநர்களுக்கும் இத்தகைய உயர்ந்த சம்பளம் வழங்கப்படுவது அரிதான ஒன்று. இந்தச் செய்தி வெளியாகியதும், லோகேஷ் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
‘கூலி’ படத்தில் ரஜினி ஹீரோவாக நடிப்பதால் ஏற்கனவே இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் பேசுப் பொருளாக உள்ளது. லோகேஷ் இயக்கிய ‘விக்ரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்கள் வசூல் சாதனை படைத்ததனால், அவரது பெயருக்கு பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது. இதனால், ‘கூலி’ படத்திற்கான எதிர்பார்ப்பு நாட்டின் அளவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
பொறுப்பை கையிலெடுத்த லோகேஷ்..
ஆனால் 50 கோடி சம்பளம் என்பது சிறிய விஷயம் அல்ல. இதற்காக லோகேஷ் மீது மூத்த இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் மிகுந்த கவனத்துடன் பார்வையிடுகிறார்கள். “சம்பளம் அதிகம் என்றால் வசூலும் அதே அளவில் இருக்க வேண்டும்” என்பது சினிமா வட்டாரத்தின் பொது கருத்து. எனவே, இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் புதிய சாதனை படைக்க வேண்டும் என்ற அழுத்தம் இருக்கிறது. இத்தனை பொறுப்பையும் கையிலெடுத்துக்கொண்டார் லோகேஷ்
தப்பித்து கொண்ட லோகேஷ்..
ஒருவேளை வசூலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் பூர்த்தியடையவில்லை என்றால் லோகேஷ்-யை எதிர்மறையாக விமர்சிக்கவும் தயாராக உள்ளார்களாம் மூத்த இயக்குநர்கள். அப்படி பார்க்கையில் நல்லவேளை லோகேஷ் தப்பித்து விட்டார் என்றே கூறலாம். ஆமாம் “கூலி” படம் ரிலீஸ் ஆகி நல்ல வசூலையும் பெற்றுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகமாக பூர்த்தி செய்து விட்டது.
சாதனை படைத்த கூலி..
லோகேஷ் ரசிகர்களும், திரைப்பட விமர்சகர்களும், ‘கூலி’ படத்தை அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய சவாலான திட்டமாகக் கருதுகிறார்கள். “ஒரு இயக்குநர் 50 கோடி சம்பளம் வாங்குவது அவரது திறமையின் சான்று” என ரசிகர்கள் பெருமையாகக் கூறினார்கள். ஆனாலும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படி, கதை, திரைக்கதை, மற்றும் தொழில்நுட்ப அம்சங்களில் மிகுந்த புதுமை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதை 100% நிறைவேற்றிவிட்டது கூலி.
தமிழ் சினிமாவில் தற்போது நடக்கும் பல்வேறு போட்டிகளுக்கிடையே, லோகேஷின் ‘கூலி’ படம் தான் அடுத்த மிகப்பெரிய ஹிட்டாக இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை வெளியிடுகின்றனர். படம் வெளியான பின், அவரது பெயர் இந்திய சினிமா மட்டுமின்றி, உலக அளவிலும் பேசப்படும் என்பதில் சந்தேகமே இல்லை என்று நினைத்ததை போல தற்போது லோகேஷ் புகழ்பெற்று விட்டார்.