Udhayanidhi: தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் என்று சொல்வார்கள். அப்படி ஒரு விஷயத்தை தான் உதயநிதி, இன்ப நிதிக்காக செய்ய இருக்கிறார். இந்த வருடத்தில் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் அன்று கலைஞர் டிவியில் இயக்குனராக இன்பநிதி பொறுப்பு எடுத்துக் கொண்டார்.
அதிலிருந்து ஒரு சில மாதங்களிலேயே தற்போது ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் முழு அரசியல்வாதியாக மாறிய பிறகு கிருத்திகா உதயநிதி தான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வந்தது.
உதயநிதி லாக் பண்ணிய இயக்குனர்!
இந்த நிலையில் இன்ப நிதி தற்போது வெளிநாட்டு படிப்பை முடித்துவிட்டு வந்திருக்கிறார். படிப்பு முடிந்த கையோடு ரெட் ஜெயன்ட் நிறுவனம் இவர் கைக்கு வந்திருக்கிறது. ஒரு சில தினங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் ரஜினி மற்றும் கமலை வைத்து ஒரு படம் பண்ண இருக்கிறார் என கேள்விப்பட்டிருக்கும்.
அந்த படத்தை உதயநிதி தன்னுடைய மகனின் தயாரிப்பு அறிமுகத்திற்காக லாக் பண்ணி இருக்கிறார். உதயநிதி நினைத்தால் கண்டிப்பாக ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க முடியும். கலைஞர் வீட்டின் நான்காம் தலைமுறை வாரிசுக்காக 40 வருடங்களுக்குப் பிறகு ரஜினி மற்றும் கமல் ஒன்றிணைய இருக்கிறார்கள்.