எதிர்நீச்சல் தொடர்கிறது: குணசேகரன், தர்ஷன் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோலாகலமாக செய்து வருகிறார். அவர் நினைத்தபடியே எல்லாம் அரங்கேறி வருகிறது. ஒரு பக்கம் ஜீவானந்தத்திற்கு போலீஸ் மூலம் செக் வைத்துள்ளார்.
மறுபக்கம் ஈஸ்வரியை தாக்கி மருத்துவமனையில் கோமா நிலைக்கு செல்லும்படி செய்து விட்டார். இப்பொழுதும் அவரை விடாமல் தனது தம்பி கதிர் மூலம் ஒரேடியாக தீர்த்து கட்டவும் முடிவு பண்ணி அவரை ஏவி விட்டுள்ளார்.
கதிரும் அண்ணனுக்கு நல்லது செய்யப் போகிறேன் என ஈஸ்வரியை ஆள் வைத்து கொள்வதற்கு மருத்துவமனைக்கு கூலிப்படையை ஏவி விட்டுள்ளார். இப்படி ஒவ்வொருத்தரையும் திசை திருப்பிவிட்டு குணசேகரன் கல்யாணத்தை தடையில்லாமல் முடிக்க ஏற்பாடு செய்து வருகிறார்.
ஜனனி டீம் கல்யாணத்தை நிறுத்த திட்டம் போட்டுள்ளதை அறிந்து, அவர்களை திசை திருப்பும் விதமாக மருத்துவமனையில் இருந்து ஈஸ்வரிக்கு ஆபத்து என போன் வருகிறது. இதனால் அவர்கள் பதட்டம் அடைந்து செய்வதறியாது முழிக்கிறார்கள்.
சக்தி மட்டும் அன்னி ஈஸ்வரியை காப்பாற்ற மருத்துவமனைக்கு விரைகிறார். கல்யாணத்தை படம் பிடிப்பதற்காக கரிகாலன் தனது நண்பன் ஹேக்கரை வரவழைத்துள்ளார். ஆனால் அவரும் எட்டப்பன் வேலை செய்கிறார். குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய வீடியோவை ஹேக் செய்து மறைமுகமாக தனது ஃபோனில் வைத்திருக்கிறார்.
இப்பொழுது கல்யாண வீடியோவை பெரிய ஸ்கிரீனில் டிஸ்ப்ளே செய்யும் வேலை அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சற்றும் எதிர்பாராமல் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ அதில் மாற்றி ஒளிபரப்பப்பட போகிறது. இதனால் குணசேகரனின் மொத்த குட்டும் அம்பலப்பட போகிறது.