இசைக்கு ஜாம்பவானாக இருக்கும் இளையராஜா பாடல்கள் தான் ரசிகர்களை சொக்க வைக்கும் அளவிற்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கிறது. காலத்தாலும் அழிக்க முடியாத இசையால் இளையராஜா பேரும் புகழும் பெற்று உச்சாணிக்கொம்பில் இருக்கிறார். அதனால் தான் தற்போதைய படங்களில் கூட அவருடைய பாடல்களை நினைவூட்டும் விதமாக சில பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இசை உரிமைகள் பற்றி எழுந்த பிரச்சனைகள்
ஆனால் இதை ஒரு பெருமையாக நினைக்காத இளையராஜா, எப்படி என்னுடைய அனுமதி இல்லாமல் என் பாட்டை பயன்படுத்திவீர்கள் என்று பிரச்சனை செய்யும் விதமாக நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்புவதை வழக்கமாக செய்து வருகிறார். அப்படித்தான் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லீ படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்தது.
இதில் இளையராஜாவின் மூன்று பாடல்களான இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி போன்ற மூன்று பாடல்கள் பயன்படுத்தப்பட்டது. இதனால் கோபப்பட்ட இளையராஜா என்னுடைய அனுமதி இல்லாமல் இந்த மூன்று பாடல்களை பயன்படுத்தியதற்காக சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் கொடுத்திருந்தார்.

இளையராஜாவின் பதிலுக்கு முக்கியத்துவம்
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் குட் பேட் அக்லி படத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த மூன்று பாடல்களை பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால் இந்த தடையை நீக்க சொல்லி தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தரப்பிலிருந்து மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. Netflix ott தளத்தில் இருந்து இந்த பாடலை நீக்க வேண்டுமென்றால் பெரும் நஷ்டம் ஏற்படும் என கூறி படத்தில் இருந்து அந்த மூன்று பாடல்களை நீக்குவது எளிதான விஷயம் அல்ல.
செப்டம்பர் 24 குட் பேட் அக்லீ விவகாரம் என்ன?
படத்தில் சின்ன சின்ன மாற்றங்கள் செய்தால் கூட அதற்காக புதிதாக மறுபடியும் தணிக்கை குழுவிடமிருந்து சான்றிதழ்களை பெற வேண்டும். மேலும் படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தலங்களில் வெளியிட்ட பிறகு எவ்வாறு நீக்க முடியும் என்று கூறி இந்த தடையை நீக்க கோரி பட தயாரிப்பு நிறுவனம் மனு தாக்கல் செய்திருக்கிறார். இதனால் இதற்கு இளையராஜா பதலளிக்க உத்திரவிட்டதால் செப்டம்பர் 24ஆம் தேதி விசாரணைக்கு இளையராஜா பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது.