தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்கள் மற்றும் வெற்றி இயக்குனர் என்று கைவிட்டு எண்ணக்கூடிய அளவிற்கு சில இயக்குனர்கள் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்கள். அதனால் அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகம் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் வந்த படங்கள் பெயிலியர் ஆனதால் தொடர்ந்து இந்த இயக்குனர்களுக்கு கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்கள்.
அதுவும் இந்த ஆண்டு இவர்களுக்கான பெயிலியர் என்று சொல்வதற்கு ஏற்ப சமூக வலைதளங்களில் மீம்ஸ் இன் மெட்டீரியலாக இவர்களின் நிலைமை சோகமாக மாறிப் போய்விட்டது. எந்த படங்களை எடுத்து தோல்வியானது என்பதை இக்கட்டுரையில் ஒரு சிறிய தொகுப்பாக பார்க்கலாம்.
பிரம்மாண்ட இயக்குனராக பெயர் வாங்கிய சங்கர்
தமிழ் சினிமாவில் “பிரம்மாண்டம்” என்ற சொல் வந்தால் முதலில் நினைவிற்கு வருபவர் இயக்குனர் சங்கர். சமூக பிரச்சினைகளை வித்தியாசமாகச் சொல்லும் திறமை, மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்களை உருவாக்கும் ஆற்றல், தொழில்நுட்பத்தை இந்திய சினிமாவிற்கு புதிதாக அறிமுகப்படுத்திய துணிச்சல்—இவையெல்லாம் அவரை ஒரு மாஸ் டைரக்டராக மாற்றி வைத்தது. “ஜெண்டில்மேன்” முதல் “2.0” வரை சங்கர் தனது கதை சொல்லும் பாணியால் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
Box Office வெற்றிகள் & தோல்விகள்
சங்கரின் பெரும்பாலான படங்கள் Mega Hit. ஆனாலும் சில படங்கள் எதிர்பார்த்த அளவு வசூல் செய்யவில்லை. கடந்த ஆண்டு கமல் நடிப்பில் இந்தியன் 2 படம் தோல்வி அடைந்த நிலையில் இணையதளத்தில் அனைவராலும் ஷங்கர் ட்ரோல் செய்யப்பட்டு விமர்சனத்திற்கு ஆளானார். அதன் பிறகு ராம்சரனை வைத்து இயக்கிய கேம் சேஞ்சர் படத்தின் மூலமாவது விட்ட இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இந்த படமும் அவரை கைவிட்டது.
⦁ வெற்றி: ஜெண்டில்மேன், இந்தியன், அன்னியன், எந்திரன், 2.0.
⦁ சராசரி/தோல்வி: ஐ, இந்தியன் 2, கேம் சேஞ்சர்
ஒரு நேரத்தில் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராகவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடியவராகவும் பெயரெடுத்த ஷங்கர் அடுத்தடுத்து இரண்டு தொழில் படங்களை கொடுத்ததன் மூலம் வெற்றி படத்தை கொடுப்பதற்கு திணறிக் கொண்டு வருகிறார். அந்த வகையில் இவருடைய கனவு திரைப்படமாக இருக்கும் வேள்பாரி மூலம் ஒரு பிரம்மாண்ட கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்ப திறமைசாலியான இயக்குனர் மணிரத்னம்
தமிழ் சினிமா வரலாற்றில் மணிரத்னம் என்ற பெயர் வந்தால் உடனே நினைவிற்கு வருவது – புதுமையான கதை சொல்லும் பாணி, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் துணிவு, உலகத் தரத்தில் காட்சிகளை உருவாக்கும் திறமை. 1980களிலிருந்து தொடங்கி இன்று வரை அவர் இயக்கிய படங்கள், கலைரசிகர்களும் Box Office ரசிகர்களும் சமமாக ரசிக்கக் கூடியவையாக அமைந்துள்ளன. OTT யுகத்திலும் மணிரத்னம் தனது தனித்துவத்தை காக்கிறார்.
மணிரத்னத்தின் கையெழுத்து பாணி
தொழில்நுட்ப புதுமை: CGI மற்றும் VFX-ஐ கதை சொல்லும் கருவியாக பயன்படுத்துதல்.
இசை & சினிமா: இசையமைப்பாளர் A.R. ரஹ்மானுடன் இணைந்து 30 ஆண்டுகளாக புதுமையான சவுண்ட்டிராக்களை கொடுத்து வருகிறார். “Song Picturization” – World Level.
சமூக கருத்துகள்: திருமணம், காதல், அரசியல், சமூகப் பிரச்சினைகள் அனைத்தையும் நவீன கோணத்தில் வெளிப்படுத்துகிறார்.
Multi-Language Approach: பல படங்களை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் எடுத்துள்ளார். இதன் மூலம் இந்திய சினிமாவின் Pan-India Director ஆனார்.
Box Office வெற்றிகள் & சவால்கள்
வெற்றி: நாயகன், ரோஜா, பாம்பே, அலைபாயுதே, குரு, PS-1 & 2.
சவால்கள்: ராவணன், தக் லைப் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவு வசூல் செய்யவில்லை. ஆனால் தோல்வியிலும் கூட அவரின் technical brilliance பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த ஆண்டு மிகப்பெரிய திருஷ்டியாக மணிரத்தினத்திற்கு தோல்வியை கொடுத்துவிட்டது.
கிளாசிக் இயக்குனரான ஏஆர் முருகதாஸ்
தமிழ் சினிமாவில் “Commercial Hit Director” என்றால் நினைவிற்கு வருபவர் ஏ.ஆர். முருகதாஸ். அவரது கதை சொல்லும் பாணி, வேகமான Screenplay, சமூக அக்கறை கலந்து வரும் Action Scenes—இவை ரசிகர்களை எப்போதும் கவர்ந்துவந்தன. ரமணா முதல் துப்பாக்கி வரை அவர் Box Office-இல் சூப்பர் ஹிட்ஸ் கொடுத்தார். ஆனால் எந்த இயக்குனருக்கும் போல், முருகதாஸுக்கும் சில Flop Movies இருந்துள்ளன. இந்தக் கட்டுரையில், அவர் கொடுத்த Blockbuster படங்களும், தோல்வி சந்தித்த படங்களும் பற்றி விரிவாக பார்க்கலாம்.
தமிழில் ரமணா, கஜினி, துப்பாக்கி போன்ற கிளாசிக் படங்களை கொடுத்து பிரபலமான இயக்குனர் முருகதாஸ் விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக துப்பாக்கி படத்தை வெற்றியாக கொடுத்தார். அத்துடன் பாலிவுட்க்கு சென்று சல்மான்கானுக்கு சிக்கந்தர் படத்தை கொடுத்து அதன் மூலம் ட்ரோலில் சிக்கி நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வந்தார். அதன் பிறகு சிவகார்த்திகேயனுக்கு மதராஸி என்ற படத்தை கொடுத்தார். ஆனால் இப்படமும் எதிர்பார்த்து அளவிற்கு கை கொடுக்கவில்லை.
இப்படி இந்த மூன்று இயக்குனர்களும் கடந்த வருடமும் இந்த வருடமும் தோல்வி படங்களை கொடுத்ததால் சமூக வலைதளங்களில் ட்ரோல் மெட்டீரியல் ஆக மாறிவிட்டார்கள். இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வேண்டுமென்றால் அடுத்து வெற்றி படத்தை கொடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் மட்டுமே சாத்தியமாகும்.